latest news
விஷுவல் கேமிங் பிரியரா நீங்க..உங்களுக்காக ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு இதோ..

பிரபல ஆப்பிள் நிறுவனம் அவ்வபோது பல புது புது படைப்புகளை மக்களுக்கு அளிக்கிறது. ஆப்பிள் நிறுவனம் என்றாலே மக்கள் பெரிதும் விரும்பும் பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் மற்றும் இந்நிறுவனம் தரமான பொருட்களை தருவதில் ஒரு தனிப்பெயரை கொண்டுள்ளது. இந்த வரிசையில் தற்போது ஆப்பிள் நிறுவனம் தற்போது விஷுவல் கேமிங் விளையாடுபவர்களுக்கு என புதிதாக விஷன் ப்ரோ ஹெட்செட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. உபயோகிப்பாளர்கள் தங்களது கண்கள், பேச்சு, கைகள் போன்றவற்றை கொண்டு இதனை இயக்கும்படி உருவாக்கியுள்ளனர். இதுவே இந்த பொருளின் தனி சிறப்பம்சம் ஆகும்.

apple vision pro headset
எட்டு ஆண்டுகளுக்கு பின் உருவாக்கப்பட்ட இந்த தயாரிப்பனது மக்களிடையே குறிப்பாக கேமிங் விருப்பமுடையவர்களிடையே பெரும் வரவேற்பை பெறலாம். இது மீக்சட் ரியாலிட்டி மற்றும் விர்சுவல் ரியாலிட்டி என ஒரு முறைகளிலும் இயங்கும் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு அதிக ஆக்மெண்டெட் ரியாலிட்டியையும் குறைந்த விர்சுவல் ரியாலிட்டியையும் கொண்டுள்ளது.

apple headset
இதன் 23 மில்லியன் பிக்ஸல் திரையானது நமது மேல் முகத்திற்கு பொருத்தமானதாக இருக்கும்படி தயாரிக்கப்பட்டுள்ளது. மேலுன் இதன் எடையும் மற்ற ஹெட்செட்களை விட குறைந்ததாகும். எனவே இதனை நாம் முகத்தில் பொருத்தும் போது அதிக எடையை உணர இயலாது. மேலும் இது 5 சென்சார்களையும், ஒவ்வொரு கண்களுக்கு 4K திரையையும் கொண்டுள்ளது. கண் சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளோர் உபயோகிப்பதற்காக இதனுள் ஆப்டிகல் லென்ஸ்கள் பொருத்தும்படியான ஸ்லாட்டும் வைக்கப்பட்டுள்ளது. இதனை 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

mac M2 processor
இந்த விஷன் ப்ரோ ஆப்பிள் தனது Mac ல் உபயோகித்திருக்கும் M2 ப்ராஸசரையே கொண்டுள்ளது. இந்த தயாரிப்பு விஷன்OS எனும் மென்பொருள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் முப்பரிமாண அமைப்பு பார்ப்போர் வியக்குபடி அமைக்கப்பட்டுள்ளது. இதன் எடையை குறைக்கும் வகையில் இதன் பேட்டரி 2 மணி நேரத்திற்கு உழைக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அற்புதமான விஷன் ப்ரோ 2024 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதன் ஆரம்ப விலை ரூ. 3,00,000 வரையும் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
