latest news
இமேஜை அனுப்புவதற்கு விரைவில் புதிய வசதியை அறிமுகப்படுத்த இருக்கும் வாட்ஸ் ஆப் நிறுவனம்..என்னனு தெரியுமா?

வாட்ஸ் ஆப் எனும் செயலியின் மூலமாக நாம் பல்வேறு தகவல்களை ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு அனுப்புகின்றோம். செய்திகள் மட்டுமல்லாது இமேஜ் மற்றவர்களிடம் பேச வாய்ஸ் கால், வீடியோ கால் என பல்வேறு வசதிகளை உபயோகப்படுத்துகின்றோம்.

whats app call
மெட்டாவின் ஒரு நிறுவனமான வாட்ஸ் ஆப் தற்போது தனது தளத்தில் ஹை டெஃபினிஷன்(HD) இமேஜ்களை அனுப்புவதற்கான புதிய வசதியை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் தற்போது பீட்டா சோதனை கட்டத்தில் உள்ளது. இந்த வசதியை ஐபோன் மற்றும் ஆண்டிராய்டு மொபைல்களிலும் உபயோகப்படுத்தலாம். இந்த வசதியானது இமேஜ்களின் பரிமாணத்தை மாற்றாமல் நமக்கு தெளிவான புகைபடங்களை கொடுக்கும்.

send hd images through whats app
WABeta info-வின் தகவலின்படி நாம் அனுப்பும் புகைப்படங்கள் பெரிய அளவில் இருந்தால் மட்டுமே நாம் இந்த வசதியை உபயோகப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த வசதி என்னதான் நாம் அனுப்பும் புகைபடங்களின் பரிமாணத்தை பாதுகாத்து அனுப்பினாலும் அதி சில நுண்ணிய இமேஜ் கம்ரஷன்கள் இருக்கதான் செய்யும் எனவும் மேலும் இது இமேஜின் ஒரிஜினல் தரத்தினை தராது எனவும் தெரிவித்துள்ளனர்.

send hd image
இயல்பாக நாம் அனுப்பும் இமேஜானது “ஸ்டான்டர்டு குவாலிட்டி”(Standard Quality)-யில் தான் அனைவருக்கும் செல்லும். நாம் ஹை டெஃபினிஷன் இமேஜ்களை அனுப்புவதற்கு நாம் எச்.டி ஆப்ஷனை தேர்வு செய்வது மிகவும் முக்கியம். இந்த வசதியை நாம் iOS 23.11.0.76 மற்றும் ஆண்டிராய்டு 2.23.12.13 என்ற வெர்ஷன் உள்ள வாட்ஸ் ஆப்பிலும் உபயோகப்படுத்தலாம். இதன் மூலம் நாம் வீடியோ குவாலிட்டியை மேம்படுத்த இயலாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
