latest news
சினிமா பிரியர்களுக்கு திகட்டாமல் அள்ளி கொடுக்கும் ஜியோவின் அதிரடி திட்டம்..

நாடு முழுவதும் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் தங்களின் சேவையை மக்கள் வாங்க பல்வேறு திட்டங்களை போட்டி போட்டுகொண்டு கொடுக்கின்றன. ஜியோ, வோடஃபோன், ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் அனைத்துமே ரீசார்ஜ் பிளான்களை மக்களுக்கு வழங்குவதில் தனித்தன்மையுடன் உள்ளன. அவ்வாறு தற்போது ஜியோ நிறுவனம் தனது செயலியில் ஒன்றான ஜியொசினிமாவில் ஒரு சலுகையை கொண்டு வந்துள்ளது.

jio apps
ஜியோ சினிமா தற்போது மிகவும் பிரபலமடைந்த ஒரு செயலியாக இருக்கிறது. இதற்கு காரணம் ஜியோ தற்போது இந்த ஆண்டிற்கான IPL 2023 யை தனது செயலியின் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதே ஆகும். இந்த நிறுவனம் தற்போது ஜியோ சினிமா பிரிமியம் எனும் பெய்டு சப்ஸ்கிரிப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சந்தாவின் கீழ் ஜியோவானது HBO வின் அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களையும் கொண்டுள்ளது. இன்னும் வரும் மாதங்களில் ஜியோ பல வசதிகளையும் இந்த சலுகையின் கீழ் கொண்டு வரவிருக்கிறது.

jio cinema 999 plan
வருடாந்திர தொகையாக ரூ. 999க்கு ரீசார்ஜ் செய்வதால் ஜியோ சினிமாவின் OTT தளத்தில் அனைத்து திரைப்படங்களையும் காணலாம். மேலும் இதில் 7 நாட்களுக்கான இலவச ட்ரயல் பீரியடையும் தருகிறது.
ரூ. 999 வசதிகள்:
- அனைத்து ஹாலிவுட் மூவிஸ் மற்றும் தொலைகாட்சி நிகல்ச்சிகள்
- ஹை-குவாலிட்டி வீடியோ மற்றும் ஆடியோ ஸ்டிரீமிங்
- நான்கு மொபைலில் பார்க்கின் வசதி
- அனைத்து நிகழ்ச்சிகளையும் விளம்பரங்கள் இல்லாமல் பார்க்கும் வசதி
இந்த வசதியினை அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் iOS வசதியுள்ள மொபைல்களிலும் பார்க்கலாம்.
