latest news
15,000 பட்ஜெட்டில் நல்ல லேப்டாப் வேணுமா?.. அப்போ இத வாங்குங்க..

இன்றைய காலகட்டத்தில் மடிக்கணினி என்ற ஒன்று இல்லாதவர்களையே பார்க்க இயலாது. பள்ளி படிக்கும் சிறுவர்களில் இருந்து கல்லூரி படிப்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் லேப்டாப் வைத்துள்ளனர். ஏனென்றால் அனைத்து துறைகளிலும் இது தேவையான ஒரு பொருளாக உள்ளது. இதன் எளிமையான அமைப்பும் மேலும் இதனை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும்படியான அமைப்புமே இதற்கு காரணம். அவ்வாறான மடிக்கணினி நமக்கு குறைந்த விலையில் கிடைத்தால் எவ்வாறு இருக்கும். ஆம் அப்படி ஒரு மடிக்கணினிகளை பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
லெனோவா ஸ்லிம் 3 குரோம்புக்:

lenovo chromebook
இந்த லேப்டாப் டச் ஸ்கிரின் வசதியுடன் இண்டெல் செலிரோன் ப்ராஸசரையும் கொண்டுள்ளது. இந்த லேப்டாப்பின் மீது தற்போது 60% சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை இ-வணிக நிறுவனமான ஃபிலிப்கார்டில் ரூ. 15,990க்கு கிடைக்கின்றது. ஆனால் இதன் உண்மையான விலை ரூ. 39,990 ஆகும். மேலும் இந்த மடிக்கணினியை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ரூ. 15,390க்கும் பெற்று கொள்ளலாம். இந்த மடிக்கணினி 4ஜிபி RAM உடன் 1 வருட ஆன்சைட் வாரண்டியையும் பெற்றுள்ளது.
அசுஸ் குரோம்புக்:

asus chrombook
இந்த மடிக்கணினியும் டச் திரையுடன் இண்டெல் செரோன்டுயல் கோர் ப்ராஸ்சரை கொண்டுள்ளது. மேலும் இதன் மீது 46% சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. ரூ. 29,990 விலையுள்ள இந்த மடிக்கணினி தற்போது ரூ. 15,990க்கு ஃபிலிப்கார்டில் கிடைக்கின்றது. எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ரூ. 15,350க்கு கிடைக்கிறது. இதுவும் 4ஜிபி RAM குரோம் ஆபரேட்டிங் சிஸ்டத்தினையும் ஒரு வருட ஆன்சைட் வாரண்டியையும் கொண்டுள்ளது.
அசுஸ் குரோம்புக் ஃப்லிப்:

asus chromebook flip
இந்த வகை மடிக்கணினியானது 50% சலுகையுடன் ரூ. 14,990க்கு கிடைகிறது. இதன் உண்மையான விலை ரூ. 29,990 ஆகும். எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ரூ. 14,450க்கு கிடைக்கின்றது. 11.6 இன்ச் திரையை கொண்ட இந்த வகை மடிக்கணினி 4ஜிபி RAM உடன் நமக்கு கிடைகின்றது.
எனவே நமக்கு விருப்பமான கணினியை தேர்வு செய்து இதைப்போல் நல்ல சலுகை வரும் போது வாங்கி கொள்ளலாம்.
