latest news
வந்துவிட்டது OPPO F23 5G போன்கள்.. இதன் வசதிகளை பற்றி பார்ப்போம்..

2ஜி, 3ஜி, 4ஜி என்ற காலம் மாறி தற்போது 5ஜி போன்களையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இதை கணக்கில் கொண்டு பிரபல மொபைல் நிறுவனமான ஓப்போ தற்போது OPPO F23 எனும் புதிய வகை போனை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சங்களை இப்போது நாம் பார்க்கலாம்.

triple rear back camera
இந்த மொபைலானது தற்போது அதன் ஸ்டோர்களிலும், அமேசான் மற்றும் ஆஃப்லைன் ரீடைல் ஷோரூம்களிலும் கிடைக்கின்றது. இந்த OPPO F23 மொபைலின் விலை ரூ. 24,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போல்ட் கோல்டு மற்றும் கூல் பிளாக் கலர்களிலும் கிடைக்கின்றது. வாடிக்கையாளர்கள் இந்த மொபைலை வாங்குவதனால் 10% இலவச கேஷ்பேக்கையும் மற்றும் 6 மாத நோ காஸ்ட் EMI வசதியினையும் பெறலாம்.
ஆக்டோகோர் ப்ராசசர் வசதியினை கொண்ட OPPO F23 5G மொபைல் 6.72 இன்ச் HD+ திரையினையும் 91.4 screen to body ratioவையும் கொண்டுள்ளது. மேலும் இந்த மொபைலானது ஆண்டிராய்டு 13 கலர் OS மற்றும் 256GB இண்டர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. இதன் பேட்டரி 5000mAh பவர் கொண்டுள்ளதால் இதனை நாம் அதிக நேரம் உபயோகிக்க முடியும்.

c-type charging port
இதன் பின்புறம் மூன்று வகையான ரியர் கேமராவையும் அதில் 64MP மெயின் கேமராவையும், 2MP மோனோ சென்சாரையும், 2 MP மைக்ரோ சென்சாரையும் கொண்டுள்ளது. மேலும் 32MP முன்புற கேமராவையும் கொண்டுள்ளது. இதன் நீடித்து உழைக்க கூடிய பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இதற்கு மேலும் மிக சிறப்பான தன்மையை கொடுக்கிறது.
