latest news
உங்கள் மொபைல் போன் தொலைந்துவிட்டதா?.. இதோ கண்டுபிடிக்க எளிமையான வழி!..

இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் இல்லாமல் மனித வாழ்க்கையே இல்லை என்றாகிவிட்டது. மொபைல் போன் பேசுவதற்கு மட்டுமல்லாமல் நமது வங்கி கணக்கிலிருந்து நமக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் மொபைல் போன் மூலம் நாம் பெறுகிறோம். மேலும் இதன் மூலம் நாம் எந்த வணிக நிறுவனத்திற்கும் பணத்தை செலுத்தவோ அல்லது திரும்ப பெறவோ முடிகிறது. இத்தகைய மொபைல் போம் தொலைந்து போனால் நாம் எவ்வாறு கண்டுபிடிப்பது. இதற்கென அரசாங்கம் தற்போது ஒரு இணையத்தினை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் நாம் நமது மொபைல் போம் தொலைந்தாலோ அல்லது எவரேனும் திருடினாலோ சுலபமாக கண்டுபிடுத்து கொள்ளலாம்.

sanchar saathi web portal
இந்த வசதிக்காக நமது அரசாங்கம் சஞ்ஜார் சாதி(Sanchar saathi) எனும் ஒரு இணையத்தினை கொண்டுவந்துள்ளது. இந்த இணையத்தின் மூலம் நாம் தொலைத்த போனை கண்டுபிடிக்க நமக்கு அந்த மொபைலின் IEMI எண் தெரிந்திருக்க வேண்டும். இந்த எண்ணானது நாம் முதலில் மொபைல் வாங்கும் பொழுது அதனுடன் வரும் பெட்டியில் இருக்கும்.
இந்த வெப்சைட்டில் நாம் புகார்களை தெரிவிக்க நாம் முதலில் http://www.sancharsaathi.gov.in என்ற முகவரிக்கு சென்று அதில் நமது விவரங்களை கொடுக்க வேண்டும். மேலும் இதன் மூலம் நாம் நமது தொலைந்த மொபைல் போன் மற்றும் நமது சிம் கார்டினை பிளாக் செய்து கொள்ளலாம். நமது மொபைல் போன் எப்போது மீண்டும் கிடைக்கின்றதோ அப்போது நாம் அதனை அன்பிளாக் செய்தும் கொள்ளலாம். இந்த வசதியின் மூலம் இதுவரை 40 லட்சம் மோசடி புகார்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் 36 லட்சம் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

mobile phone uses
சஞ்சார் சாத்தி போர்டல் தொலை தொடர்பு நிறுவனங்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. எனவே இனி நமது மொபைல் போன் தொலைந்தால் இந்த வசதியினை பயன்படுத்தி கொள்ளலாம்.
