govt update news
ஜெர்மன் வேலை வாய்ப்பு… தமிழக அரசின் சிறப்பு பயிற்சி…
ஜெர்மன் நாட்டில் நர்ஸ் வேலைக்கு கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்தாயிரம் காலியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. செவிலிய உதவியாளர், நலன் கொடுப்போர் வேலைகளுக்கான காலியிடங்களில் பணியமர பி.எஸ்.சி நர்ஸிங் அல்லது ஜி.என்.எம் கல்வித் தகுதி இருக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஜெர்மனிய மொழி பற்றிய பயிற்சி வகுப்புகள் தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட உள்ளது. இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சி சேர்வது குறித்து முன்பதிவிற்கான இறுதி நாள், மற்றும் வகுப்புகள் துவங்கப்படும் தேதி, பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ள ஊர்கள் குறித்த விவரங்களும் சொல்லப்பட்டிருக்கிறது.
இதன்படி அக்டோபர் மாதம் 25ம் தேதி பதிவிற்கான கடைசி செய்தியாக சொல்லப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் வகுப்புகள் வருகிற நவம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து துவங்க இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
ஆப்-லைன் முறையில் வகுப்புகளுக்கு நேரில் சென்று மட்டுமே இந்த பயிற்சி வகுப்பில் சேர முடியும். வெளியூர்களிலிருந்து தங்கி படிக்க வருபவர்களுக்கு இட வசதி செய்து தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது இது குறித்த அறிவிப்பில்.
செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குனகரகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரங்களை அரசு இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். நான் முதல்வன் திட்டம், ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களின் கல்வி மற்றும் தொழில்சார் கனவுகளைத் தொடர தேவையான உபகரணங்கள் மற்றும் வாய்ப்புகளை வழங்குவதற்கான தமிழக அரசின் மூலமாக செயல்படுத்தப் பட்டுள்ள திட்டமாகும்.