Cricket
2025 ஐபிஎல் போட்டிகளில் 3 பிராக்சர்களுடன் விளையாடிய சாஹல் – வெளிவந்த அதிர்ச்சி தகவல்

ஐ.பி.எல். 2025 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் யுஸ்வேந்திர சாஹல். இந்த சீசனில் பஞ்சாப் அணியால் ரூ. 18 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட சாஹல் அந்த அணியின் எதிர்பார்ப்பை மீறிய ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். நடந்து முடிந்த ஐ.பி.எல். சீசனில் பஞ்சாப் அணிக்காக 13 போட்டிகளில் களமிறங்கிய சாஹல் 16 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் இரண்டு முறை ஒரே போட்டியில் நான்கு விக்கெடுகள் எடுத்ததும் அடங்கும்.
சில போட்டிகளில் கை விரல் காயம் காரணமாக சாஹல் விளையாடவில்லை. மே 18-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய சாஹல் அதன்பிறகு ஜூன் 1-ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 2-வது குவாலிஃபயர் போட்டியில் தான் களமிறங்கினார்.
இதனிடையே சாஹலுடன் பலமுறை ஒன்றாக காணப்பட்ட ஆர்.ஜே. மாஹ்வாஷ் வெளியிட்ட தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இது குறித்து அவர் வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், “இரண்டாவது போட்டியிலேயே அவரது விலா எலும்புகள் உடைந்துவிட்டன. அதன்பிறகு அவர் பந்துவீசும் கைவிரலும் உடைந்தது,” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “அவர்கள் போராடினர், போட்டியின் கடைசி வரை முயற்சித்தனர். சாஹலுக்கு ஸ்பெஷல் போஸ்ட், ஏனெனில் அவர் விளையாடிய 2-வது போட்டியிலேயே அவரது விலா எலும்பு, உடைந்தது. அதன்பிறகு அவர் பந்துவீசும் கைவிரலும் உடைந்தது. எனினும், இந்த சீசன் முழுக்க 3 பிராக்சர்களுடன் இவர் விளையாடி முடித்துள்ளார்.”
“அவர் கத்துவது, அழுவதை பார்த்திருக்கிறோம், ஆனால் அவரது போர்குணம் எத்தகையது தெரியுமா? இந்த அணி கடைசி பந்துவரை போராடியது. இந்த ஆண்டு இந்த அணிக்கு ஆதரவாளராக இருந்தது மிகவும் பெருமை அளிக்கிறது. சிறப்பாக விளையாடினீர்கள் வீரர்களே. இந்த படங்களில் உள்ள வீரர்கள் அனைவருக்கும் என் மனதில் இடம் உண்டு. உங்களை அடுத்த ஆ்டு சந்திக்கிறேன். மேலும், ஆர்.சி.பி. அணிக்கு வாழ்த்துக்கள். ஒவ்வொருத்தரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஐ.பி.எல். தொடர் உண்மையிலேயே இந்தியர்களுக்கு திருவிழா தான்,” என குறிப்பிட்டுள்ளார்.
