காலிங், GPS என எல்லாமே இருக்கு.. அசத்தும் புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

0
41

அமேஸ்ஃபிட் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய GTR 4 New- ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. முன்பு இந்த மாடலுக்கான டீசர்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்தது. தற்போது இந்த வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

அம்சங்களை பொருத்தவரை 1.45 இன்ச் HD AMOLED டிஸ்ப்ளே, 200-க்கும் அதிக கஸ்டமைஸ் செய்யக்கூடிய வாட்ச் ஃபேஸ்கள் மற்றும் ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 150-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 8 வெவ்வேறு ஸ்போர்ட்களை இந்த வாட்ச் தானாக கண்டறிந்து கொள்ளும். இதுதவிர உடற்பயிற்சிகளையும் கண்டறிந்து, நேரலையில் விவரங்களை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் செப்ஓஎஸ் 2 கொண்டுள்ளது. இதில் ஏராளமான கேம்கள், கஸ்டமைஸ் செய்யக்கூடிய இன்டர்ஃபேஸ், பில்ட்-இன் அமேசான் அலெக்சா மற்றும் ஆஃப்லைன் வாய்ஸ் அசிஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 5ATM தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, செப் ஆரா தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது தனிப்பட்ட முறையில் உறக்கம் மற்றும் ஓய்வு எடுப்பதற்கான கைடாக செயல்படும்.

இதில் உள்ள பயோடிராக்கர் 4.0 சென்சார் 24 மணி நேரமும் இதய துடிப்பை டிராக் செய்யும், SpO2 மற்றும் மன அழுத்தத்தை டிராக் செய்யும் வசதியை உறுதிப்படுத்துகிறது. இத்துடன் ப்ளூடூத் காலிங் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-ஐ முழு சார்ஜ் செய்தால் 12 நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

இந்தியாவில் புதிய அமேஸ்பிட் GTR 4 New மாடல் கேலக்ஸி பிளாக்- சிலிகான் ஸ்டிராப் மற்றும் பிரவுன் லெதர் எடிஷன்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 16,999 ஆகும். விற்பனை அமேசான் மற்றும் அமேஸ்ஃபிட் இந்தியா வலைதளங்களில் நடைபெறுகிறது.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here