அமேசானில் அதிரடி ஆஃபரில் மொபைல் போன்கள்- மிஸ் பண்ணிடாதிங்க..அப்புறம் வருத்தப்படுவீங்க…

இந்திய சந்தையில் ஆன்லைன் வலைதளங்கள் நடத்தும் சிறப்பு விற்பனைகள் அதிக சேமிப்புகளை வழங்குவது அனைவரும் அறிந்ததே. சரியாக செயல்பட்டு, சிறப்பாக தேடினால் அதிரடியான சலுகை மற்றும் தள்ளுபடியுடன் விரும்பிய பொருட்களை ஆன்லைன் விற்பனையில் வாங்கிட முடியும். ஆன்லைன் சலுகை விற்பனை அதிக சலுகைகளை வழங்கும் என்ற போதிலும், நேரம் கடக்கும் போது, இவற்றில் அதிரடி மாற்றங்கள் அவ்வப்போது செய்யப்படுவதும் வாடிக்கையான ஒன்று ஆகும்.

அந்த வகையில் சிறப்பு விற்பனை துவங்கியதில் இருந்து, ஒவ்வொரு சில மணி நேர இடைவெளியில் பொருட்களுக்கு அறிவிக்கப்படும் சலுகை பலன்களில் மாற்றங்கள் செய்யப்படும். அதிக சலுகைகள் கொண்ட பொருட்களுக்கு, நேரம் கடக்கும் போதும், விற்பனை அதிகரிக்கும் போதும் சலுகை பலன்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு கொண்டே வரும். அதன்படி பயனர்கள் விரும்பிய பொருட்களை தேடிப்பிடித்ததும், விரைந்து அதனை ஆர்டர் செய்வதன் மூலம் அதிக தொகையை மிச்சப்படுத்த முடியும்.

அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் சிறப்பு விற்பனை கிட்டத்தட்ட ஒரே தேதிகளில் தான் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது வாடிக்கையான விஷயம் தான். முன்னதாக ப்ளிப்கார்ட் வழங்க இருக்கும் சலுகைகள் பற்றிய தகவல்களை ஏற்கனவே பார்த்து இருப்பீர்கள். இன்று அமேசான் வலைதளத்தில் ஸ்மார்ட்போன்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சிறப்பு சலுகைகள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

ஆப்பிள் ஐபோன் 14:

iPhone-14
iPhone-14

ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே ஐபோன் 14 மாடலின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. சலுகை விற்பனையின் போது ஐபோன் 14 மாடலை ரூ. 66 ஆயிரத்து 499 விலையில் வாங்கிட முடியும். இதுதவிர வங்கி சலுகைகள் எற்றும் பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது கூடுதல் தள்ளுபடி பெற்றிட முடியும்.

ரெட்மி ஏ2:

Redmi A2
Redmi A2

சியோமி நிறுவனத்தின் என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனிற்கும் அமேசான் சிறப்பு விற்பனையில் அசத்தல் சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி பயனர்கள் புதிய ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போனினை ரூ. 5 ஆயிரத்து 699 எனும் துவக்க விலையில் வாங்கிட முடியும்.

ரியல்மி நார்சோ N55:

realme narzo N55
realme narzo N55

வங்கி சலுகைகள் உள்பட இந்த நார்சோ ஸ்மார்ட்போனினை பயனர்கள் தற்போது ரூ. 11 ஆயிரத்து 999 எனும் துவக்க விலையில் வாங்கிட முடியும். ரூ. 12 ஆயிரம் பட்ஜெட்டில் சிறப்பான பிராசஸர், நீண்ட நேர பேட்டரி, அசத்தல் கேமரா சென்சார்கள் அடங்கிய ஸ்மார்ட்போனாக நார்சோ N55 விளங்குகிறது.

சாம்சங் கேலக்ஸி M13:

Samsung Galaxy M13
Samsung Galaxy M13

அமேசான் சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி M13 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டிற்குள் கிடைக்கிறது. பட்ஜெட் விலையில் சாம்சங் M சீரிஸ் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிடுவோருக்கு கேலக்ஸி M13 சிறந்த தேர்வாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் விலை தற்போது ரூ. 9 ஆயிரத்து 699 என்று மாறி இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி S20 FE 5ஜி:

Samsung Galaxy S20 FE 5G
Samsung Galaxy S20 FE 5G

சாம்சங் நிறுவனத்தின் S20 FE ஸ்மார்ட்போன் விலை தற்போது ரூ. 23 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இதில் வங்கி சலுகைகளும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை பிரிவில், சாம்சங் கேலக்ஸி S20 FE மாடல் சிறப்பான தேர்வாக இருக்கும்.

ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி அமேசான் தளத்தில் கிடைக்கும் ஏராளமான பொருட்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அமேசான் பிரைம் டே சேல் ஜூலை 15 மற்றும் ஜூலை 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் சலுகைகள் எந்நேரத்திலும் மாற்றப்படும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். இவை ஸ்டாக் இருப்பு மற்றும் பல்வேறு காரணங்களால் எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம்.

Leave a Comment