latest news
ஆர்டர் செய்த 10வது நிமிடத்தில் ஹெட்போன் டெலிவரி.. பங்கம் செய்யும் போட்..!
போட் நிறுவனம் ப்ளின்கிட் (Blinkit) உடன் இணைந்து தனது சாதனங்களை அதிவிரைவில் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த கூட்டணியை அமைக்க போட் மற்றும் ப்ளின்கிட் முன்வந்துள்ளன. இது தொடர்பாக விளம்பர வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டு இருக்கிறது.
விளம்பர வீடியோவில் போட் சாதனங்கள் ப்ளின்கிட் மூலம் எளிதில் ஆர்டர் செய்வது மற்றும் அதிவிரைவாக டெலிவரி செய்யப்படும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. மேலும், தீபாவளிக்கு தேவையான பொருட்களை வெறும் பத்தே நிமிடங்களில் பெறுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. இதில் பிரீமியம் ஆடியோ சாதனங்களை எவ்வித காத்திருப்பும் இன்றி விரைவாக டெலிவரி பெற முடியும் என்பதும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
“ப்ளின்கிட் உடன் இணைந்து தீபாவளியை கூடுதல் ஸ்பெஷலாக மாற்ற நாங்கள் ஆவல் கொண்டிருக்கிறோம். அசிவேக டெலிவரி மூலம், நீங்கள் போட் நிறுவனத்தின் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை எங்கிருந்தும் பெற முடியும். உங்களது பண்டிகை கால கொண்டாட்டங்கள் மற்றும் மறக்க முடியாத நினைவுகளை ஏற்படுத்த இது தான் சரியான விதமாக இருக்க முடியும்,” என்று போட் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.