பௌல்ட் நிறுவனம் இந்திய சந்தையில் மூன்று புதிய சவுண்ட்பார் மாடல்களை அறிமுகம் செய்தது. இவை பேஸ்பாக்ஸ் X60, பேஸ்பாக்ஸ் X250 மற்றும் பேஸ்பாக்ஸ் X500 என அழைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு மாடலும் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் இவை பாரம்பரிய டிசைன் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டிருக்கின்றன.
மூன்று சவுண்ட்பார்களிலும் பூம்எக்ஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஆழமான பேஸ் வழங்குவதை உறுதிப்படுத்துகிறது. இத்துடன் மேம்பட்ட ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளது. மேலும் இவற்றில் DSP சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. இது சவுண்ட் பிராசஸிங்கை சிறப்பாக மாற்றுவது மற்றும் ஏராளமான EQ மோட்களை இயக்குவதற்கு வழிவகுக்கும்.
பேஸ்பாக்ஸ் X60 மாடலில் 60W திறன் கொண்ட ஸ்பீக்கர்கள் உள்ளன. இதில் ப்ளூடூத் 5.4, AUX, USB மற்றும் HDMI கனெக்ஷன் மற்றும் மாஸ்டர் ரிமோட் கண்ட்ரோல் வசதி உள்ளது. பேஸ்பாக்ஸ் X250 மாடலில் டால்பி டிஜிட்டல் சவுண்ட் மற்றும் 250W ஸ்பீக்கர் உள்ளது. இந்த மாடலில் பூம் எக்ஸ் தொழில்நுட்பம், ப்ளூடூத் 5.3, AUX, USB, ஆப்டிக்கல் மற்றும் HDMI (ARC) ஆப்ஷன்கள் உள்ளன.
புதிய பேஸ்பாக்ஸ் X500 மாடலில் 500W ஸ்பீக்கர் உள்ளது. இத்துடன் 5.1 சேனல் செட்டப், டால்பி டிஜிடடல் சவுண்ட், DSP சிப், IOP கோர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதில் ப்ளூடூத் 5.3, HDMI (ARC) உள்ளது.
விலை விவரங்கள்:
பௌல்ட் பேஸ்பாக்ஸ் X60 (ஜெட் பிளாக்) ரூ. 2,999
பௌல்ட் பேஸ்பாக்ஸ் X250 (பிளாக்) ரூ. 9,999
பௌல்ட் பேஸ்பாக்ஸ் X500 (பிளாக்) ரூ. 14,999
பௌல்ட் நிறுவனத்தின் புதிய சவுண்ட்பார் மாடல்கள் அதன் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.