Connect with us

tech news

ஆர்வ கோளாறில் வெளியாகிடுச்சி.. ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் எப்போ தெரியுமா?

Published

on

Flipkart-Logo-1

ப்ளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் மிகவும் பிரபலம். ஆண்டின் மிகப்பெரிய விற்பனை திருவிழாவாக பிக் பில்லியன் டேஸ் சேல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பயனர்கள் பல்வேறு பொருட்களுக்கும் ஏராளமான தள்ளுபடி, சிறப்பு விலை குறைப்பு மற்றும் வங்கி சார்ந்த சலுகைகளை பெற முடியும்.

ஆன்லைன் சிறப்பு விற்பனைகளில் எக்கச்சக்க சேமிப்புகளை வழங்கும் இந்த விற்பனை இந்த ஆண்டு எப்போது நடைபெறுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.அதன்படி ப்ளிப்கார்ட் பிளஸ் சந்தாதாரர்களுக்கு பிக் பில்லியன் டேஸ் விற்பனை செப்டம்பர் 29 ஆம் தேதி துவங்குகிறது.

கூகுள் தேடலில் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை எப்போது துவங்கும் என்ற கேள்விக்கு கூகுள் வெளியிட்ட பதிலில், “பிக் பில்லியன் டேஸ் விற்பனை பிளஸ் சந்தா வைத்திருப்பவர்களுக்கு செப்டம்பர் 29 ஆம் தேதி துவங்கும். ப்ளிப்கார்ட் வழங்கும் அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடியை பெறுங்கள்,” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

குறிப்பிட்ட பதிலை வழங்க இணைய முகவரியை க்ளிக் செய்ததற்கு, “ரிப்பேர் தேவைப்படுகிறது. காத்திருங்கள், இதனை சரி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்,” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

பொதுவாக தீபாவளி பண்டிகையை ஒட்டி, அதாவது ஒரு மாதத்திற்கு முன்பே ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை நடத்தப்படும். கடந்த ஆண்டு ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை அக்டோபர் 8 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 18 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த ஆண்டு ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனை எப்போது துவங்கும் என்று அந்நிறுவனம் சார்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை. மேலும், இதில் எவ்வளவு சலுகைகள் வழங்கப்படும் என்பதும் மர்மமாகவே உள்ளது. 2024 பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையில் ப்ளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது 5 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம்.

இத்துடன் ப்ளிப்கார்ட் பே லேட்டர் சலுகையின் கீழ் பயனர்கள் ரூ. 1 லட்சம் வரையிலான பொருட்களை வாங்கிட முடியும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இத்துடன் தேர்வு செய்த பொருட்களை வாங்கும் போது சூப்பர் காயின்களை கொண்டு கூடுதல் தள்ளுபடியும் பெற முடியும்.

ஸ்மார்ட்போன், லேப்டாப், இயர்பட்கள், வீட்டுக்கு தேவையான மின்சாதன பொருட்கள் என ஏராளமான பொருட்களுக்கு இந்த சிறப்பு விற்பனையில் அதிக தள்ளுபடி மற்றும் சேமிப்புகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ப்ளிப்கார்ட் போன்றே அமேசான் தளத்திலும் சிறப்பு விற்பனை நடத்தப்படும். அமேசான் தளத்தில் இதேபோன்ற விற்பனையை அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் என்ற பெயரில் நடத்தும்.

google news