கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் பிக்சல் 9, பிக்சல் 9 ப்ரோ, பிக்சல் 9 ப்ரோ XL மற்றும் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டு என மொத்தம் நான்கு மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் பிக்சல் 9 ஃபோல்டு மாடலின் விற்பனை இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்திய சந்தையில் கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டு மாடல் 16GB ரேம், 256GB மெமரி என ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,72,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட், க்ரோமா மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் தளங்களில் நடைபெறுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அப்சிடியன் கிரே மற்றும் பொர்சிலைன் ஆஃப் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
புதிய பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்தும் போதும், மாத தவணை முறை பயன்படுத்தும் போதும் ரூ. 10,000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேஞ்ச் சலுகையாக ரூ. 13,500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை மாதம் ரூ. 12,459 எனும் மாத தவணையில் வாங்கும் வசதியும் வழங்கப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை கூகுள் பிக்சல் ஃபோல்டு மாடலில் 8-இன்ச் OLED பேனல், 2K ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 6.3 இன்ச் கவர் டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், டென்சார் G4 பிராசஸர், டைட்டன் M2 செக்யூரிட்டி சிப்செட் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4650mAh பேட்டரி, 45W வயர்டு சார்ஜிங் மற்றும் Qi வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.