மூன்றாக மடிக்கலாம்: புதுவித போல்டபில் அறிமுகம் செய்யும் ஹூவாய் – எப்போ தெரியுமா?

0
101

ஹூவாய் நிறுவனம் தனது முற்றிலும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. அடுத்த வாரம் அறிமுகமாக இருக்கும் புதிய போல்டபில் போன் மூன்றாக மடிக்கக்கூடிய வகையில் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டு உள்ளது.

ஹூவாயின் மூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் யு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். அதன்படி இந்த சாதனம் செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகமாகிறது. இந்திய நேரப்படி இந்த சாதனத்தின் அறிமுக நிகழ்வு செப்டம்பர் 10 ஆம் தேதி மதியம் சரியாக 12 மணிக்கு துவங்குகிறது.

புதுவித போல்டபில் போன் என்பதால், இதன் வெளியீடு மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ரிச்சர்ட் யு இந்த ஸ்மார்ட்போனை கையில் வைத்திருக்கும் புகைப்படங்கள் சிலமுறை இணையத்தில் கசிந்துள்ளன. தற்போது இதன் அறிமுகம் கிட்டத்தட்ட உறுதியாகி இருப்பது தொழில்நுட்ப ரசிகர்களிடையே பெரும் ஆவலை தூண்டியுள்ளது.

மூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஹூவாய் நிறுவனம் தனது முற்றிலும் புதிய ஹார்மனி ஓஎஸ் சார்ந்து இயங்கும் ஸ்மார்ட் சாதனங்களையும் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான டீசர்களில் மூன்றாக மடிக்கக்கூடிய புது ஸ்மார்ட்போனின் நிழல் உருவம் தெரியும் படம் இணைக்கப்பட்டு இருக்கிறது.

சர்வதேச சந்தையில் இதுவரை மூன்றாக மடிக்கக்கூடிய சாதனங்கள் எதுவும் அறிமுகம் செய்யப்பட்டது இல்லை. அந்த வகையில், இத்தகைய சாதனத்தை அறிமுகம் செய்யும் முதல் பிரான்டு என்ற பெருமையை ஹூவாய் பெறும் என்று தெரிகிறது. இந்த சாதனத்தை முழுமையாக திறக்கும் போது 10 இன்ச் அளவு கொண்ட திரையை பயன்படுத்தலாம்.

இதில், இரு ஸ்கிரீன்களை உள்புறமாகவும், ஒரு ஸ்கிரீனை வெளிப்புறமாகவும் மடிக்க முடியும். இவற்றை இணைப்பதற்காக இரட்டை ஹிஞ்ச் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த சாதனத்தில் ஹூவாயின் சொந்தமான கிரின் 9 சீரிஸ் சிப்செட் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் வட்ட வடிவம் கொண்ட கேமரா மாட்யுல் மற்றும் மிக மெல்லிய டிசைன் கொண்டிருக்கும்.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here