முழுசா ₹13,601 குறைந்தது.. என்னப்பா ஐபோன் ஆர்டர் போடலாமா..?

0
107

ஆப்பிள் நிறுவனம் தனது முற்றிலும் புதிய ஐபோன் சீரிஸ் மாடல்களை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கிறது. சர்வதேச வெளியீட்டைத் தொடர்ந்து இந்த மாடல்கள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த நிலையில், புதிய ஐபோன் வெளியீட்டை ஒட்டி, ஐபோன் 15 சீரிஸ் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 பிளஸ் என நான்கு மாடல்களை ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது. தற்போது புதிய ஐபோன்கள் வெளியீடு காரணமாக ஐபோன் 15 பிளஸ் மாடலுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

புதிய ஐபோன் 15 பிளஸ் 128GB பேஸ் வேரியண்டின் விலை ஆப்பிள் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ரூ. 89,600 ஆகும். எனினும், ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 13,601 வரை குறைக்கப்பட்டு ரூ. 75,999-க்கு பட்டியலிடப்பட்டு உள்ளது. இத்துடன் பயனர்கள் தங்களது பழைய ஸ்மார்ட்போனை கொடுத்து கூடுதல் தள்ளுபடியை பெறும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.

இவைதவிர பயனர்கள் ஹெச்எஸ்பிசி, ஃபெடரல் வங்கி கிரெடிட் கார்டு மூலம் மாத தவணை முறை சலுகையை பெறும் போது ரூ. 1500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், பேங்க் ஆஃப் பரோடாவின் பாப்கார்டு (BOBCARD) வைத்திருப்பவர்கள் யுபிஐ பரிவர்த்தனை செய்யும் போது கூடுதலாக ரூ. 1000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

பேஸ் வேரியண்ட் மட்டுமின்றி ஐபோன் 15 பிளஸ் 256GB மற்றும் 512GB மெமரி மாடல் விலை முறையே ரூ. 85,999 மற்றும் ரூ. 1,05,999 என மாறியுள்ளன. ஆப்பிள் இந்தியா வலைதளத்தில் இவற்றின் விலை முறையே ரூ. 99,600 மற்று்ம ரூ. 1,19,600 என குறிப்பிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here