ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கிறது. சர்வதேச சந்தையை போன்றே இந்தியாவிலும் செப்டம்பர் 9 ஆம் தேதி முற்றிலும் புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் அறிமுகமாகின்றன. இதையொட்டி ஐபோன் 15 சீரிஸ் விலை குறைக்கப்படுகிறது. பல்வேறு தளங்களிலும், ஐபோன் 15 சீரிஸ் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் பலன்கள் வழங்கப்படுகிறது.
இந்த வரிசையில், ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு பெருமளவு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ரிலையன்ஸ் டிஜிட்டல் வலைதளத்தில் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் விலை ரூ. 1,37,990 என குறிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு இதே ஐபோன் மாடல் ரூ. 1,59,900 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில், இந்த ஐபோன் மாடல் வாங்கும் போது பயனர்கள் ரூ. 21,910 தள்ளுபடி பெறலாம்.
இத்தகைய விலை குறைப்பு ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் 256GB மாடலுக்கானது ஆகும். இதுதவிர ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 5000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதையும் சேர்க்கும் போது ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் 256GB மாடலின் விலை ரூ. 1,32,990 என மாறிவிடும். இந்த ஐபோன் மாடல் வாங்குவோர் மாத தவணை முறை சலுகையையும் பயன்படுத்தலாம்.
வலைதளத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த சலுகை எவ்வளவு நேரம் வழங்கப்படும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. அந்த வகையில், இந்த சலுகை எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படவோ அல்லது சலுகையில் மாற்றம் செய்யப்படவும் அதிக வாய்ப்புகள் உண்டு.
அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.7 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது. இதில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏ17 ப்ரோ பிராசஸர் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 48MP பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் நாள் முழுக்க தேவையான பேக்கப் வழங்கும்.