tech news
50W வயர்லெஸ் சார்ஜிங்… ஃபார்முக்கு வரும் ஆப்பிள்.. லீக் ஆன முக்கிய தகவல்

ஆப்பிள் நிறுவனம் அதிவேக சார்ஜிங் வசதியை வழங்கும் மேக்சேஃப் சார்ஜர்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஆப்பிள் உருவாக்கி வரும் சார்ஜிங் பேட்களின் விவரங்கள் சான்றளிக்கும் வலைதளங்களில் இடம்பெற்றுள்ளன.
புதிய சார்ஜிங் பேட்கள் Qi2.2 தர சார்ஜிங் வசதியை வழங்கும் என்றும் தெரிகிறது. புதிய சார்ஜிங் பேட்கள் வரவிருக்கும் ஐபோன் 17 சீரிஸ் மாடல்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் இவை அதிகபட்சம் 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்கும் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி 91மொபைல்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களில், புதிய வகை மேக்சேஃப் சார்ஜர்கள் தாய்வான் நாட்டின் தேசிய தகவல் பரிமாற்ற ஆணைய வலைதளத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த சார்ஜர்கள் A3502 மற்றும் A3503 என்ற மாடல் நம்பர் கொண்டுள்ளன. தோற்றத்தில் புதிய சார்ஜர்கள் அதன் முந்தைய மாடலை போன்றே காட்சியளிக்கின்றன.
எனினும், இவற்றை வித்தியாசப்படுத்தும் வகையில், இரு சார்ஜர் மாடல்களுடன் பிரெய்டட் கேபிள் வழங்கப்பட்டுள்ளது. புதிய சார்ஜர்களில் A3502 மாடலுடன் ஒரு மீட்டர் கேபிளும், A3503 சாகர்ஜருடன் இரண்டு மீட்டர் நீளமுள்ள கேபிளும் வழங்கப்படுகிறது.
புதிய மேக்சேஃப் சார்ஜர்கள் அடுத்த தலைமுறை Qi2.2 தர வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை வயர்லெஸ் பவர் கன்சார்டியம் விரைவில் வெளியிடும் என்று கூறப்படுகிறது. இவை அடுத்த தலைமுறை ஐபோன் மாடல்களில் அதிகபட்சம் 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்கும்.
தற்போது ஆப்பிள் விற்பனை செய்து வரும் மேக்சேஃப் சார்ஜர்கள் Qi2 தரத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்டு இருக்கின்றன. எனினும், இவை தற்போது அதிகபட்சம் 15 வாட் வரையிலான சார்ஜிங் வசதியைத் தான் வழங்கி வருகின்றன. புதிய ஐபோன் 16 மாடல்கள் அனைத்தும் 25 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
