சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய கேலக்ஸி A06 ஸ்மார்ட்போனினை சத்தமின்றி அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் கேலக்ஸி A05 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதே ஸ்மார்ட்போன் சில தினங்களுக்கு முன் வியட்நாம் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அம்சங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி A06 மாடலில் 6.7 இன்ச் HD+ 1600×720 பிக்சல் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், மாலி G52 GPU வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4GB ரேம், 64GB மெமரி மற்றும் 4GB ரேம், 128GB மெமரி என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன்யுஐ ஓஎஸ் கொண்டிருக்கும் கேலக்ஸி A06 ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஆண்டுகள் ஓஎஸ் அப்டேட்கள், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ் மற்றும் 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
கனெக்டிவிட்டிக்கு 4ஜி LTE, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத், GPS மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. இத்துடன் 3.5mm ஆடியோ ஜாக் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும் 25W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
இந்திய சந்தையில் புதிய கேலக்ஸி A06 ஸ்மார்ட்போன் கோல்டு, லைட் புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ. 9,999 என்றும் 4GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 11,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.