latest news
அட்டகாசமான ஆஃபர்களுடன் வெளியாகவுள்ள விவோ Y36 4G ..இதன் சிறப்பம்சங்கள் இதோ..

பிரபல நிறுவனமான விவோ தனது Y36 மொபைல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் Y35 என்ற மொபைலை அறிமுகப்படுத்தியது. இது சந்தையில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது இந்த நிறுவனம் தனது தயாரிப்பான Y36 மொபைலை இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தியதை அடுத்து இந்தியாவிலும் மிக விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த மொபைலை பற்றிய தகவல்கள் பின்வருமாறு:
ப்ரைஸ்பாபாவில்(Pricebaba) கணிப்பின்படி இந்த மொபைலின் விலையானது ரூ.19500 என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைலான இந்தியாவிற்கு ஜுன் மாதம் கடைசியில் வரும் என அறிவித்துள்ளனர்.

snapdragon 680 chipset
இந்த மொபைலானது 6.64இன்ச் அல்ட்ரா ஓ(Ultra O) LCD திரையை கொண்டுள்ளது. மேலும் இதன் திரை 1080X2388 பிக்சலுடன் வருகிறது. மேலும் இந்த மொபைலானது Snapdragon 680 chipset ப்ராஸசரை கொண்டுள்ளது. இந்த மொபைலானது 8ஜிபி RAM மற்றும் 256ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜயும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ஆண்டிராய்டு 13-ல் இயங்க கூடியதாகவும் உள்ளது.

50 mp rear camera
இது 50MP டூயல் பின்புற கேமராவையும் 16MP முன்புற செல்பி கேமராவையும் கொண்டுள்ளது. இதன் பேட்டரி 5000mAh திறனையும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டையும் கொண்டுள்ளது. இந்த வகையான மொபைல் கருப்பு மற்றும் கிரீம் என இரண்டு நிறங்களில் நமக்கு கிடைக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
