latest news
நீங்க மட்டும் தான் கொடுப்பீங்களா… நாங்களும் தருவோம்… 5ஜி சேவையில் களமிறங்கும் வோடபோன்..!
வோடபோன் நிறுவனம் தங்களது பயனாளர்களை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் 5g சேவையை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
இந்தியாவில் உள்ள முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் vodafone நிறுவனமும் ஒன்று. ஆனால் கடும் நிதி நெருக்கடி காரணமாக வோடபோன் ஐடியா நிறுவனம் விரைவில் பயிற்சி சேவையை தொடங்கியிருக்கின்றது. அதாவது அடுத்த ஆண்டுக்குள் 5ஜி சேவையை முதற்கட்டமாக டெல்லியிலும் அடுத்ததாக மும்பையிலும் தொடங்க இருப்பதாக கூறப்படுகின்றது.
கடந்த சில மாதத்திற்கு முன்பு ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தனது ரீசார்ஜ் கட்டண தொகையை உயர்த்தியதால் பல்வேறு மக்கள் வோடபோன் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற நிறுவனத்திற்கு மாறி வருகிறார்கள். இதனை தக்க வைத்துக்கொள்ள வோடபோன் நிறுவனம் முடிவு செய்து இருக்கின்றது.
அந்த வகையில் தற்போது vodafone நிறுவனம் 2025 ஆம் ஆண்டு முதல் தனது 5ஜி சேவையை தொடங்க திட்டமிட்டு இருக்கின்றது, படிப்படியாக அதன் சேவையை முக்கிய நகரங்களில் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது. மெட்ரோ நகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் முதலில் கவனம் செலுத்தி வரும் வோடபோன் 17 பிராந்தியங்களில் பயிற்சி சேவையை வெளியிட இருப்பதாக வோடபோன் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஜக்பீர் சிங் தெரிவித்திருக்கின்றார்.
2024 ஆம் ஆண்டு ஜூன் காலாண்டு நிலவரப்படி இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் 90 சதவீதத்தை அதன் 4G கவரேஜை அதிகரிப்பதையும் திட்டமிட்டு இருக்கின்றது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவற்றுடன் சிறப்பாக போட்டியிட தனது நெட்வொர்க்கை வலுப்படுத்த முயற்சி செய்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக வோடபோன் ஐடியா பங்கின் விலை 24 ஆயிரம் கோடியை திரட்ட உள்ளது.
இதில் ஃபாலோவர்கள் பொது சலுகையில் 18000 கோடியும் அடங்கும். 4g நெட்ஒர்க்கை மேம்படுத்தவும், 5g வெளியீட்டை ஆதரிக்கவும் இதனை பயன்படுத்துவதற்கு முடிவு செய்து இருக்கிறார்கள். முதலில் நகர்ப்புறங்கள் மற்றும் உட்புறங்களில் ஸ்பெக்ட்ரத்தைப் பயன்படுத்தி செல்போன் கோபுரங்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறார்கள். இந்த புதிய தளங்களில் 50,000 தயாராக இருப்பதாகவும், மீதமுள்ள 50,000 தளங்களை அடுத்து 9 மாதத்திற்குள் முடிப்பதற்கும் முயற்சி மேற்கொண்டு வருவதாக வோடபோன் நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.