40 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்கும் புதிய இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்

விங்ஸ் நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த மாதம் விங்ஸ் ஃபேண்டம் 345 மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து, விங்ஸ் ஃபேண்டம் 340 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய இயர்பட்ஸ் தெளிவான ஆடியோ அனுபவத்தை வழங்கும் நோக்கில், “As Clear As It Gets” என்று அழைக்கப்படுகிறது.

புதிய விங்ஸ் ஃபேண்டம் 340 மாடல் டிரான்ஸ்பேரண்ட் கேஸ், சவுகரியமான ஃபிட் வழங்கும் டிசைன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள 13 மில்லிமீட்டர் டிரைவர்கள் உள்ளன. இவை தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. இத்துடன் 30db ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி, ஸ்பீடு சின்க் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அதிகபட்சம் 15 மீட்டர்கள் வரை சிறப்பான ரேஞ்ச் வழங்குகிறது.

இத்துடன் டச் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டு இருப்பதால், அம்சங்களை எளிதில் இயக்க முடியும். ஒபன் அண்ட் ஆன் டெக் சப்போர்ட் கொண்டிருப்பதால், விங்ஸ் ஃபேண்டம் 340 மாடலை முழு சார்ஜ் செய்தால் 40 மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்குகிறது. இத்துடன் யுஎஸ்பி டைப் சி புல்லட் சார்ஜிங் வசதி உள்ளது. இதன் மூலம் இயர்பட்ஸ்-ஐ பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 10 மணி நேரத்திற்கு பிளேடைம் கிடைக்கிறது.

Wings-Phantom-340
Wings-Phantom-340

இதில் உள்ள இயர்பட்ஸ் ஸ்மார்ட் ENC தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இது அழைப்புகளின் போது தெளிவான ஆடியோ அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்கிறது. இத்துடன் IPX5 வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது உடற்பயிற்சி செய்யும் போது பயன்படுத்தக்கூடியதாக மாற்றுகிறது. இதனுடன் விங்ஸ் சின்க் ஆப், பல்வேறு கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களின் மூலம் பயனர் அனுபவத்தை மேம்படுத்துகிறது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

விங்ஸ் ஃபேண்டம் 340 மாடல் அறிமுக சலுகையாக ரூ. 1499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை அமேசான், ப்ளிப்கார்ட், விங்ஸ் ஆன்லைன் வலைதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.

Leave a Comment