latest news
இனி அனைத்து மொழிகளிலும் விலாக் போடலாம்..யூடியூபர்களுக்காக புதிய வசதி அறிமுகம்..என்னனு தெரிங்சிகோங்க..

தற்போது யூடியூப் மூலம் வருமான பார்ப்பவர்கள் அதிகம். தங்களிம் அன்றாட வாழ்க்கை பழக்கவழக்கங்கள், தாங்கள் செல்லும் சுற்றுலா தளங்கள், சாப்பிடும் உணவுகள் என அனைத்து நிகழ்வுகளையும் விலாக் எனப்படும் ஒரு வகை வீடியோவாக யூடியூப்பில் வெளியிட்டு வருகின்றனர். அதில் தங்களது வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவர்களுக்கு அந்த நிறுவனமானது சம்பளம் கொடுக்கிறது. ஆனால் இந்த மாதிரியான வீடியோக்களை எடுப்பவர்களால் மற்ற மொழிகளை பேச முடியாததால் அவர்கள் மற்ற மொழிகளில் வீடியோக்களை போட முடியாமல் இருக்கின்றனர்.

aloud AI tool
இவ்வாறு உள்ளவர்களுக்கு என தற்போது ஒரு புதிய வசதியை யூடியூப் நிறுவனம் வெளியிடவிருக்கிறது. இந்த வசதியின் மூலம் இனி அனைத்து யூடியூபர்களும் தங்கள் வீடியோக்களை மற்ற மொழிகளிலும் டப் செய்து கொள்ளலாம். விட்கான் என்ற நிறுவனத்தின் AI Powered tool அலவ்டு என்ற டூல் மூலம் இனி நமது வீடியோக்களை மற்ற மொழிகளில் டப்பிங் செய்து கொள்ளலாம்.

AI tool for creators
இதன்படி நாம் எடுக்கும் வீடியோக்களை நமது விருப்பமான மொழிகளில் மாற்றிக் கொடுத்து பின் நாம் அதனை எடிட் செய்தபின் நமக்கு தேவையான மொழிகளில் மொழிபெயர்த்து கொடுக்கும். மேலும் இது நமது கிட்டதட்ட நமது குரல் மாதிரி மொழிபெயர்த்து கொடுக்கும். இது தற்போது 100க்கும் மேற்பட்ட யூடியூபர்களிடம் சோதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த வசதியை இப்போதைக்கு சில மொழிகளில் மட்டுமே உபயோகப்படுத்த முடியும். தற்போது English, Spanish மற்றும் Portuguese என மூன்று மொழிகளில் மட்டுமே அறிமுகப்படுத்தபட்டுள்ளது.
