tech news
ஜியோடிவி, ஜியோபே, பல வசதிகள்.. ₹1799-க்கு புது ஜியோபோன் அறிமுகம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஜியோபோன் மாடல் ஜியோபாரத் J1 4ஜி எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது என்ட்ரி லெவல் பீச்சர் போன் ஆகும். இதில் 4ஜி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. இந்த போனுடன் ஜியோவின் விசேஷமான ஜியோபாரத் ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.
புதிய ஜியோபாரத் J1 4ஜி மொபைல் போனில் ஜியோடிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோபே போன்ற செயலிகள் பிரீ இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் கேமரா சென்சார் வழங்கப்படுகிறது. இந்த மாடல் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஜியோபாரத் B1 4ஜி மாடலுடன் இணைகிறது.
அம்சங்களை பொருத்தவரை ஜியோபாரத் J1 4ஜி மாடலில் 2.8 இன்ச் டிஸ்ப்ளே, பிரத்யேக கீபேட், நேவிகேஷன், அழைப்புகளை ஏற்கவும், நிராகரிக்கவும் தனி பட்டன்களை கொண்டுள்ளது. இந்த மொபைல் போன் Threadx RTOS கொண்டிருக்கிறது. இதில் 0.13GB ஸ்டோரேஜ் உள்ளது. இதனை 128GB வரை நீட்டித்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.
இந்த மொபைல் வாங்குவோர் ரூ. 123 விலை கொண்ட ஜியோ 4ஜி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், மாதம் 14GB வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் பயனர்கள் 455+ சேனல்களை ஜியோடிவி மூலம் பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோபே மூலம் யுபிஐ பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள முடியும்.
ஜியோபாரத் J1 4ஜி மாடலில் 2500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும் இதில் 3.5mm ஆடியோ ஜாக் வழங்கப்படுகிறது. இந்த மொபைல் அளவீடுகளில் 135 x 56 x 16mm ஆக இருக்கிறது. இதன் எடை 122 கிராம்கள் ஆகும்.
விலையை பொருத்தவரை புதிய ஜியோபாரத் J1 4ஜி போனின் விலை ரூ. 1,799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது. இந்த மொபைல் போன் டார்க் கிரே நிறத்தில் கிடைக்கிறது.