latest news
சான்ஸ் தேட நினைத்த கடை ஓனர்…சீறிப்பாய்ந்த சிங்கப் பெண்…
ஆணும், பெண்ணும் சமம் தான் என்பதனை நிரூபிக்கும் விதமாக பெண்கள் தங்களது செயல்களால் ஆற்றலால், திறமையால் காட்டி வருகின்றனர் இன்றைய நவீன உலகத்தில். அதே நேரத்தில் ஆண்களையும் தாண்டிய புகழையும் அடைந்து ஒரு படி மேலே உயர்ந்து நிற்கும் பெண்களையும் பார்த்து உள்ளது இந்த புவி.
ஆண் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு பெண்கள் தங்களது வாழ்க்கை நிலையை உயர்த்தியும், வாழ்வாதாரத்தை வளப்படுத்தியும், வசதியான வாழக்கை நோக்கி சென்றும் வருகின்றனர் தங்களது கடின உழைப்பால். இப்படி பல விதமான மாறுதல்களையும், முன்னேற்றங்களையும் கண்டு வருபவர்களும் இருக்கும் நிலையில், கொடூர எண்ணங்கள் கொண்ட ஆண்களும் பெண்களினுடைய சூழ்நிலையை காரணமாக பயன்படுத்தி தங்களுக்கு தேவையான விஷயங்களை சாதித்துக்கொள்ள அவர்களை ஒரு கருவியாக நினைத்து பயன்படுத்தி வருவதும் இருந்து வருகிறது.
ஆண்களின் அலட்சியத்தையும், அவர்களின் தேவைகளை உணர்ந்து அந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக்கி தங்களது தேவைகளை பூர்த்தி செய்து வரும் பெண்களையும் இந்த உலகம் பார்த்தும் வருகிறது. ஆனால் தன்னை உணர்ந்த பெண் எந்த சூழ்நிலையில் அகப்பட்டாலும் அதற்கு அடிமையாகமல் தன்னை பாதுக்காக்க தேவையானவற்றை அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்த தயங்கியதும் கிடையாது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பேரங்காடியில் வேலை கேட்டுச் சென்ற பதினெட்டு வயது பெண்ணிடம், பேரங்காடி உரிமையாளர் ஆபாசமாக பேசியதாக சொல்லப்படுகிறது. தன்னிடம் வார்த்தைகளால் அத்து மீறிய பல் பொருள் அங்காடி உரிமையாளர் பலராமனின் செயல்கள் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்.
தனது மகளிடம் ஆபாசமாக பேசிய பாலா பல் பொருள் அஙகாடியின் உரிமையாளர் பலராமனைப் பற்றி காவல் துறையில் புகார் செய்திருக்கின்றனர் அந்த பெண்ணின் பெற்றோர். தனக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி மனம் நொந்து போகாமல் தனது பெற்றோரிடம் முறையாக தெரிவித்த திருப்பத்தூர் பெண்ணின் துணிச்சலை பற்றிய செய்தி இப்போது வைரலாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், தனது மகளுக்கு நேர்ந்தது போன்ற நிகழ்வு மற்ற பெண்களுக்கு நடந்து விடக்கூடாது என்ற அந்த பெண்ணின் பெற்றோர் காவல் துறை உதவியை நாடிய நிகழ்வு பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.