latest news
மீண்டும் பாதிக்கப்பட்ட மைக்ரோசாப்ட் சேவை… என்ன தான் ஆச்சு?
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சேவைகள் மீண்டும் பாதிக்கப்பட்டு பயனர்கள் அவதிப்பட்டு உள்ள நிலை உருவாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரபலம் மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட்டில் கடந்த 19ஆம் தேதி ப்ளூ ஸ்க்ரீன் எரர் உருவாகி உலகமெங்கும் இருக்கும் பயனர்களின் கணினியை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியது. இதனால் விமான சேவை முதல் வங்கி சேவை வரை பலவற்றிலும் பாதிப்பு ஏற்பட்டது. பல கோடி நஷ்டம் உருவானது.
இதைத் தொடர்ந்து கணினி கோடினில் ஏற்பட்ட பிழை தான் இதற்கு காரணம் என மைக்ரோசாஃப்ட் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டது. பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் இந்த சிக்கல் சீர் செய்யப்பட்டது. சில நாட்கள் கூட ஆகாத நிலையில் தற்போது மைக்ரோசாஃப்டின் 365யை பயன்படுத்த முடியாத நிலை உருவாகி இருக்கிறது.
இதனால் அதனுடன் இணைந்த கிளவுட் சேவைகள் மற்றும் அசுரி சேவைகளையும் பயன்படுத்த முடியவில்லை என கூறப்பட்டுள்ளது. இதை தன்னுடைய எக்ஸ் வலைதள பதிவு மூலம் உறுதிப்படுத்தியுள்ள மைக்ரோசாப்ட், இதற்கு மாற்று வழியையும் அறிவித்தது. ஆனால் அதிலும் பிரச்சனை நிலவுவதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சினையை சரி செய்யும் வரை கண்காணித்து வருவதாகவும் மைக்ரோசாப்ட் தெரிவித்து இருக்கிறது.