latest news
Paris Olympics2024: மூன்றாவது பதக்கத்தினை நோக்கி நகரும் பிவி சிந்து… சாதிப்பாரா?
பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். இது இந்திய ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி வி சிந்து எம் பிரிவில் இடம்பெற்றுள்ளார். ஏற்கனவே முதல் சுற்றில் மாலத்தீவு வீராங்கனையை 21-9, 21-6 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இரண்டாவது சுற்றில் எஸ்தோனியா வீராங்கனை கிரிஸ்டின் கூபாவை எதிர்கொண்டார். இதில், முதல் சுற்றை 21-5 என்ற அடிப்படையில் சிந்து கைப்பற்ற இரண்டாம் சுற்றை 21-10 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனால் பிவி சிந்து 2-0 என்ற அடிப்படையில் காலிறுதிக்கு முந்தையை சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார்.
2016 ரியோ ஒலிம்பிக்ஸ் மற்றும் 2021 டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பேட்மிண்டன் போட்டியில் ஏற்கனவே பிவி சிந்து வென்று இந்தியாவிற்கு பதக்கத்தினை பெற்றுக்கொடுத்தார். ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை சிந்து பெற்று இருந்தார். இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் அந்த சாதனையை துப்பாக்கி சுடுதலில் மனு பாக்கர் சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.