tech news
மெட்டாலிக் பினிஷ் கொண்ட புது நத்திங் போன் – விலை எவ்வளவு தெரியுமா?
நத்திங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் நத்திங் போன் 2a பிளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இது நத்திங் நிறுவனத்தின் நான்காவது ஸ்மார்ட்போன் மாடல் ஆகும். இது அந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த நத்திங் போன் 2a மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
அம்சங்களை பொருத்தவரை நத்திங் போன் 2a பிளஸ் மாடலில் 6.7 இன்ச் FHD+ 120Hz OLED ஸ்கிரீன், அதிவேகமான மீடியாடெக் டிமென்சிட்டி 7350 பிராசஸர், மாலி G610 GPU, ஸ்மார்ட்போனை அதிக சூடாகாமல் பார்த்துக் கொள்ள அதிநவீன லிக்விட் கூலிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
போட்டோக்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 50MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி, அதிகபட்சம் 12GB ரேம், 256GB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த நத்திங் ஓஎஸ் 2.6 கொண்டிருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி, 5000mAh பேட்டரி, 50W சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் புதிய நத்திங் போன் 2a பிளஸ் கிரே மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8GB ரேம், 256GB மெமரி மாடல் விலை ரூ. 27,999 என்றும் 12GB ரேம், 256GB மெமரி மாடல் விலை ரூ. 29,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
விற்பனை ஆகஸ்ட் 7 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.