Connect with us

latest news

கூராப்பு போட்டு கருப்பா தெரியுது வானம்!…குற்றாலத்துல ஜாலியா குளிக்கனும்னா இன்னைக்கு தான் போனும்!…

Published

on

courtallam

தென் மேற்கு பருவ மழையின் தீவிரம் ஒரு பக்கம், கேரளாவின் தொடர் மழை ஒரு பக்கம், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு மறுபக்கம் என சீதோஷன நிலையில் பல மாற்றங்கள் தொடர்கிறது. இதனால் குற்றால சீசனிலும் நாளுக்கு நாள் மாற்றங்கள் இருந்து வருகிறது. கடந்த வார சனிக்கிழமைக்கு பிறகு அடுத்த மூன்று நாட்கள் அனைத்து அருவிகளிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

பாதுகாப்பு காரணங்களுக்காக போடப்பட்டுருந்த தடை, நிலைமை இயலபான பின்னரே அகற்றப்பட்டது. வார வேலை நாட்களில் எப்போது இருக்கும் கூட்டமே தான் நேற்று வரை காணப்பட்டது. அதிகான காற்று, திடீர் சாரல், ஆர்ப்பரித்து அருவிகளில் கொட்டிய தண்ணீர்,  குளித்து மகிழ நினைத்து வந்தவர்களை திருப்திப்படுத்தி அனுப்பும் நிலைதான் இருந்து வந்தது.

Falls File Picture

Falls File Picture

இன்று காலை பதினோரு மணி நிலவரப்படி குற்றாலத்தின் பிரதான அருவிகளான ஃபைவ்ஃபால்ஸ்,  பழைய குற்றாலம், மெயின் ஃபால்ஸ் அருவிகளில் அளவாகவும் அருமையாகவும் விழுந்தது தண்ணீர். வெயிலின் தாக்கம் குறைந்தே காணப்பட்டது. கருமேகக்கூட்டங்கள் வானத்தை சூழ்ந்து கூராப்பு போட்டிருந்தது. காற்றும் தனது வேகத்தில் கடுமையை காட்டியது. சாரலும் அவ்வப்போது விழுந்து குளிர்ச்சியை அதிகரித்தது.

அதிக நேரம் குளித்து மகிழ முடியாதோ? என அச்சத்தை கொடுக்கக்கூடிய கூட்டமும் இருக்கவில்லை. இதனால் இன்பத்தை மட்டுமே இலக்காக வைத்து கொண்டு குற்றாலத்தை நோக்கி பயனிப்பவர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும் என்கின்ற உறுதியை தரும் விதமாகவே காட்சியளித்தது இன்று காலை பதினோரு மணி வரையிலான நிலவரம்.

 

 

 

 

 

google news