latest news
சென்னை கடற்கரை- தாம்பரம் வழித்தடத்தில் மேலும் பல மின்சார ரயில்கள் ரத்து…
தாம்பரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் செய்திக்குறிப்பில், காலை 9.20 முதல் மதியம் 1.30 வரையும், இரவு 10.30 முதல் நள்ளிரவு 2.45 மணி வரை இயக்கப்பட்டு வந்த சென்னை கடற்கரை முதல் தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காலை 7.17, 8.19 , 9.22, 9.40, 9.50 மணிக்கும், மாலை 6.26, 7.15 மணிக்கும் தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில்கள் ஆகஸ்ட் 3ந் தேதி முதல் ஆகஸ்ட் 14ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சென்னை கடற்கரை முதல் பல்லாவரம் இடையேயான வழித்தடத்தில் 20 நிமிஷங்களுக்கு ஒரு சிறப்பு ரயிலை இயக்கவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, கடற்கரை முதல் பல்லாவரம் வரை காலை 9.30 முதல் மதியம் 12.45 மணி வரைக்கும், அதுப்போல பல்லாவரத்தில் இருந்து காலை 10.17 முதல் மதியம் 1.42 மணி வரைக்கும் 15 நிமிஷங்களுக்கு ஒருமுறை சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..
இதுமட்டுமல்லாமல், சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.40, 12.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள், பட்டாபிராமில் இருந்து ஆவடிக்கு இயக்கப்படும் இரவு 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில்களும் ஆகஸ்ட் 2ம் தேதி மற்றும் 4ம் தேதி ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.