latest news
தொழிலாளர்களை மதிக்க தவறிய அரசு…இது தான சமூக நீதியா?…அன்புமணி ராமதாஸ் காட்டம்…
ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிலும் பள்ளியின் கழிப்பறைக்குள் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தது மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியதா? அப்படி தெரியவில்லை என்றால் மாநகராட்சி முற்றிலுமாக செயலிழந்து விட்டதாகத் தான் பொருள். இது போன்ற அபத்தமான விளக்கங்களின் மூலம் உண்மையை மறைத்து விட முடியாது என தமிழக அரசை விமர்சித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.
வெளி மாநிலத் தொழிலாளர்கள் தூய்மைப்பணிக்காக அழைத்து வரப்படும் நிலையில், அவர்களுக்கு உழைப்பிற்கேற்ற் ஊதியம், சத்தான உணவு, பாதுகாப்பான தங்குமிடம் ஆகிவற்றை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசு மற்றும் திருப்பூர் மாநகராட்சியின் கடமை ஆகும்.
ஆனால், வாழத்தகுதியற்ற, நாற்றம் வீசக்கூடிய அறையில் வடமாநிலத் தொழிலாளர்களை ஒரு மாதத்திற்கும் மேலாக அடைத்து வைக்கப்பட்டிருந்ததை தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசும். மாநகராட்சியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன என அன்புமணி ராமதாஸ் தனது குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளார்.
அனைவருக்கும் சமூக நீதி வழங்கப்படுகிறது, அனைவரின் உரிமைகள் எல்லாம் பாதுகாக்கப்படுகின்றன என்றெல்லாம் மூச்சுக்கு முன்னூறு முறை தம்பட்டம் அடித்துக் கொள்கிறது திமுக அரசு, ஆனால் இருமாதத்திற்கு மேலாக தொழிலாளர்களை கழிப்பறையில் தங்க வைத்திருக்கிறது திமுக அரசு.
இதுவா சமூக நீதி?, இது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்த அனைவரும் உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அன்பு மணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தூய்மை பணிக்காக வரவழைக்கப்பட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் திருப்பூரில் கழுவறையில் தங்க வைக்கப்பட்ட விவகாரம் குறித்த தனது அறிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இவற்றை சொல்லியிருக்கிறார்.