Connect with us

Cricket

இந்த கால பசங்க அசால்ட்-ஆ 400 அடிப்பாங்க: சேவாக்

Published

on

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர், சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டக்காரர் என்று அறியப்படுபவர் விரேந்திர சேவாக். டி20 காலக்கட்டத்தில் வீரர்கள் அடித்து ஆடும் போக்கில் அதிக கவனம் செலுத்துகின்றனர் என்று தெரிவித்தார்.

டெல்லி பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் விளம்பர தூதராக அறிவிக்கப்பட்ட விரேந்திர சேவாக், இது தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். டி20 கிரிக்கெட்டில் அதிக பணப்புழக்கம் காரணமாக அதிகளவு இளம் வீரர்கள் கிரிக்கெட் ஆட ஆர்வமுடன் வருவதாக தெரிவித்தார்.

“இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் விதத்தை பாருங்கள், அவர்கள் ஓவருக்கு ஐந்து ரன்களை விளாசுகின்றனர். நான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் போது ஆஸ்திரேலியா அணி ஓவருக்கு நான்கு ரன்களை அடித்து வந்தது. உங்களால் அடித்து ஆட முடியும் என்றால், உங்களது அணி டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற அதிக வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தேன்.”

“என் மகனுக்கு 17 வயதாகிறது, அவன் டெல்லி அன்டர் 16 அணிக்காக மூன்றுநாள் கிரிக்கெட் விளையாடினான். ஆனால், பலர் இந்த வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். நாங்கள் 18 வயதில் இருந்த போது, ஐபிஎல் தொடர் இல்லை. ஆனால் இன்றைய இளைஞர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட முயற்சிக்கலாம். இதற்கு டெல்லி பிரீமியர் லீக் தொடர் நல்ல வாய்ப்பை கொடுக்கும்.”

“டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்றவாரு அதிரடியாக ஒருவர் விளையாட முடியும் என்றால், ஏன் அவர் அதை செய்யக் கூடாது? எதுவாயினும், மக்கள் டெஸ்ட் போட்டிகளையும் வந்து பார்க்க வேண்டும். நல்லதோ, கெட்டதோ? நான் 270 பந்துகளில் 300 ரன்களை அடித்திருக்கிறேன். ஆனால், இந்த காலத்து இளம் வீரர்கள் அதிக பந்துகளை சந்தித்தால் 400 ரன்களை கூட எளிதில் அடிக்க முடியும்,” என்று விரேந்திர சேவாக் தெரிவித்தார்.

google news