tech news
180MP கேமரா கொண்ட FLAGSHIP போன் அறிமுகம் – எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ஹானர் மேஜிக் 6 ப்ரோ 5ஜி என அழைக்கப்படுகிறது. பிரீமியம் பிரிவில் அறிமுகமாகி இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் உயர் ரக அம்சங்களை கொண்டிருக்கிறது.
அதன்படி ஹானர் மேஜிக் 6 ப்ரோ 5ஜி மாடலில் 6.8 இன்ச் LTPO டிஸ்ப்ளே, 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட், குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 12GB ரேம், 512GB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்கள் எடுக்க 180MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, OIS, 50MP லென்ஸ், 50MP அல்ட்ரா வைடு கேமரா, 50MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள ஹானர் மேஜிக் 6 ப்ரோ 5ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த மேஜிக் ஓஎஸ் 8 வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களாக 5ஜி, வைபை, ப்ளூடூத், GPS/AGPS, Galileo, GLONASS, Beidou, OTG, யுஎஸ்பி டைப் சி, IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 5600mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 80W வயர்டு சார்ஜிங், 66W வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை 40 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்திட முடியும்.
விலை விவரங்கள்:
இந்திய சந்தையில் ஹானர் மேஜிக் 6 ப்ரோ 5ஜி மாடலின் 12GB ரேம், 512GB மெமரி மாடல் விலை ரூ. 89,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் எபி கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. விற்பனை ஆகஸ்ட் 15 ஆம் தேதி துவங்குகிறது.