Connect with us

latest news

மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி… சென்னை மாநகராட்சி எடுத்த திடீர் முடிவு…

Published

on

சென்னை தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்பு பணியால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் சென்னை போக்குவரத்து கழகம்  பயணிகளுக்கு சந்தோஷமான செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

இது குறித்து அவர்கள் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், தாம்பரம் ரயில் நிலையத்தில் ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால், காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரையும் மற்றும் இரவு 10 மணி முதல் 11.59 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் வழித்தடத்தில் செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் அனைத்தும் பல்லாவரம் ரயில் நிலையம் வரையும், சென்னை கடற்கரைக்கு செங்கல்பட்டிலிருந்து செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்பட  இருப்பதாக என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன் காரணத்தால், இந்த வழித்தடத்தில் பயணம் செய்து வரும் பயணிகள் நலன் கருதி ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 14 வரை, கூடுதலாக செங்கல்பட்டுக்கு செல்ல பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து 30 பேருந்துகளும், கூடுவாஞ்சேரிக்கு பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து 20 பேருந்துகளும், தியாகராய நகா் மற்றும் பிராட்வேக்கு தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து 20 பேருந்துகள் என மொத்தம் 70 புதிய பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மேலும், தாம்பரத்தில் ஏற்படும் கூட்டநெரிசலை சமாளிக்க கூடுவாஞ்சேரி வழித்தடத்தில் செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்து மிஷன் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் ஆகஸ்ட் 14 வரை தற்காலிகமாக நிறுத்தப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

google news