automobile
கார் பிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. இந்த காரில் இவ்வளவு சிறப்பம்சங்களா?..
இக்காலத்தில் வாகனம் இல்லாத மனிதர்களை பார்ப்பதே கடினம். இப்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் கார் வைத்துள்ளனர். தங்களின் வசதிக்கு ஏற்றார்போல் சிறிய பட்ஜெட்டில் தனகென்று ஒரு வாகனம் வைத்துள்ளனர்.
இந்திய-ஜப்பான் கூட்டு முயற்சியில் உருவான நிறுவனம்தான் மாருதி சுசுகி. இந்த நிறுவனம் தற்போது புதுமாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகபடுத்தியுள்ளது. இது தற்போது மாருதி சுசுகி ஃப்ரான்க்ஸ் என்ற புதுவகை காரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆல்பா, டெல்டா, டெல்டா+, டர்போ, சீட்டா எனும் பல வகையான மாடல்களை தந்துள்ளது.
இதன் ஆரம்ப விலை 7.46லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஒரு கிராஸ் ஓவரிஷ் எஸ்.யூ.வி(crossover’ish suv) வகையை சேர்ந்தது.
இந்த ஃப்ரான்க்ஸ் வகை காரானது 3995mm நீளத்தையும் 1765mm அகலத்தையும் 1550mm உயரத்தையும் கொண்டுள்ளது. இது 190mm கிரவுண்ட் க்ளியரன்ஸை(ground clearance)யும் 2520mm வீல் பேஸ்(wheel base)-ம் கொண்டுள்ளது.
இந்த வகை காரின் முக்கிய சிறப்பம்சம் இதில் உள்ள எஞ்சின் வகைதான். இதில் இரண்டு வகையான எஞ்சின்கள் உள்ளன. ஒன்று 1.2லிட்டர் கே வகை(k-series) எஞ்சின் மற்றொன்று 1.0லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ எஞ்சின்(Boosterjet turbo engine). 1.2l எஞ்சின் 88.76bhp, 113Nm டார்கையும்(Torque), 1.0l எஞ்சின் 98.63 bhp, 148Nm டார்க்கையும் வெளியிடுகிறது.
1.2l எஞ்சின் 5 வேக கியரிலும் மற்றும் ஆட்டோ கியரிலும்(AGS), 1.0l எஞ்சின் 5 வேக கியரிலும் 6 வகையான ஆட்டோமேட்டிக் கியரிலும் இயங்குகின்றன.
இக்காரின் உள்பாகம் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முன்பகுதி இரு வண்ண கலர்களில் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 9 இன்ச் பொழுதுபோக்கு வசதி கொண்ட டச் திரை இதில் பயணம் செய்பவர்களுக்கு மேலும் சிறப்பான வசதியை கொடுக்கிறது. இதனுடன் 360 டிகிரி கேமரா நமது பாதுகாப்பிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் வயர்லெஸ் சார்ஜெரும் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சிறப்பம்சங்கள் கொண்ட இந்த கார் மக்களிடம் எந்த அளவிற்கு வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.