Cricket
சமனில் முடிந்த முதல் ஒருநாள் போட்டி – சூப்பர் ஓவர் ஏன் இல்லை தெரியுமா?
இலங்கை நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
இதைத் தொடர்ந்து இரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது. இவ்வாறு போட்டி சமனில் முடிந்தால், சூப்பர் ஓவர் கொண்டுவர ஐசிசி விதி அமலில் உள்ளது.
எனினும், முதல் ஒருநாள் போட்டியில் ஏன் இந்த விதிமுறை கொண்டுவரப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. கொலம்போவில் உள்ள பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது 230 ரன்களை சேர்த்தது.
குறைந்த இலக்கை துரத்திய இந்திய அணி 230 ரன்களை சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் போட்டி சமனில் முடிந்தது. இவ்வாறு போட்டி சமனில் முடியும் போது, சூப்பர் ஓவர் கொண்டுவரப்படும்.
கடந்த டிசம்பர் 2023-இல் மாற்றப்பட்ட ஐசிசி விதிகளின் படி போட்டி சமனில் முடிந்தால் காலநிலை அனுமதிக்கும் வரை சூப்பர் ஓவர் கொண்டுவருவதற்கு விதிகளில் இடம் உண்டு. இந்த விதிமுறைப்படி, போட்டியில் முடிவு எட்டப்படும் வரை சூப்பர் ஓவர் விளையாடலாம். ஒருவேளை விளையாட முடியாத சூழல் ஏற்பட்டால், போட்டியை சமனில் முடித்துக் கொள்ளலாம்.
முதல் போட்டி சமனில் முடிந்த நிலையில், இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் கடைசி மற்றும் இறுதிப் போட்டி ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.