latest news
அடிக்குது வெயிலு…சீசன் இன்னைக்கு ஃபெயிலு…குற்றாலம்…
குற்றாலத்தின் சீசன் ஒரு நாள் உச்சத்திலும், ஒரு நாள் இயல்பான நிலையிலும், சில நேரத்தின் வறட்சி, வெள்ளப்பெருக்கு எனவும் மாறி மாறி அமைந்து வருகிறது. சீசன் நேரத்தில் மட்டும் தான் குற்றாலத்தின் முழு குளுமையையும் அனுபவிக்க முடியும் என்பதால் தான் இத்தனை ஆர்வம் இருந்து வருகிறது. தென் மேற்கு பருவ மழை காலத்தில் தான் இங்கே தண்ணீரின் வரத்து அதிகமாக இருக்கும். கேரளாவில் பெய்யும் மழையும் குற்றாலத்தின் சீசன் நிலவரத்தை உறுதி செய்யும்.
குற்றாலத்தின் சீசன் இந்தாண்டு இது வரை பெரிதாக சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றத்தை கொடுக்கவில்லை என்றே தான் சொல்ல வேண்டும். சீசன் துவங்கியதிலிருந்து இது வரையிலான நாட்களை கணக்கிட்டு பார்த்தால் ஆனந்தத்தையே தந்துள்ளது.
நேற்று விடுமுறை தினம் என்பதானால் குற்றாலத்தில் கூட்டம் கலைகட்டியது. குற்றாலம் முழுவதும் கலகலப்பான சூழலே இருந்து வந்தது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதமான சூழலை அனுபவிக்க குற்றாலத்தை நோக்கி படையெடுத்த மக்களுக்கு பேரானந்தத்தை வாரி வழங்கியது நேற்றைய சூழல்.
இன்று காலை பத்து மணி நிலவரப்படி குற்றாலத்தில் நேற்றை விட வெயிலின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. அருவிகளில் விழுந்து வந்த தண்ணீரின் அளவும் குறைவாகவே காணப்பட்டது. சாரலுக்கு இது வரை சாத்தியம இருக்கவில்லை.
காற்றும் பலமாக வீசி வருகிறது. இன்று வாரத்தின் வேலை நாள் எனபதால் குற்றாலத்தில் குளித்து மகிழ சுற்றுலாப் பயணிகள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்று சொல்லும் அளவில் தான் இருந்தது. நேற்றைய நிலையோடு இன்று நிலவிவரும் சூழலை கணக்கிட்டு பார்த்தால் இன்று மந்தமான நிலையிலே தான் காட்சியளித்தது காலை பத்து மணி நிலவரத்தின் படி.