Connect with us

Cricket

புது அணியில் இணைந்த தினேஷ் கார்த்திக்

Published

on

இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக். சர்வதேச கிரிக்கெட்டில் பலரும் செய்ய தயங்கும் செயல்களை அசால்ட்டாக செய்து காட்டியவர். கடந்த ஜூன் மாதம் தனது பிறந்த நாளில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தினேஷ் கார்த்திக் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வந்தார் தினேஷ் கார்த்திக்.

தற்போது ஓய்வை அறிவித்துள்ள நிலையில், தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளார். தென்ஆப்பிரிக்காவில் பிரபல SA20 சீரிசில் தினேஷ் கார்த்திக் பால் ராயல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். இந்த தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த பிறகு கிரிக்கெட் தொடரில் விளையாடுவது பற்றி பேசிய தினேஷ் கார்த்திக், “தென்ஆப்பிரிக்காவில் கிரிக்கெட் விளையாடியது மற்றும் சுற்றுப் பயணம் செய்தது பற்றி பல்வேற நல்ல நினைவுகள் என்னிடம் உள்ளது. இந்த வாய்ப்பு கிடைத்த போது, அதனை என்னால் மறுக்க முடியவில்லை. மீண்டும் போட்டியில் விளையாடி ராயல்ஸ் உடன் வெற்றிகளை குவிப்பது எவ்வளவு விசேஷமாக இருக்கும் என்று எனக்கு தெரியும்,” என்று தெரிவித்தார்.

தினேஷ் கார்த்திக் கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக விளையாடினார். இந்திய அணிக்காக இவரின் கடைசி போட்டி வங்காளதேசம் அணிக்கு எதிராக அமைந்தது. ராயல்ஸ் அணியின் இயக்குநராக இலங்கை வீரர் குமார் சங்கக்காரா உள்ளார்.

இவரே தினேஷ் கார்த்திக்கின் அனுபவம் தனது அணிக்கு உதவும் என்று அவரை அணியில் இணைக்க காரணமாக செயல்பட்டுள்ளார். இந்திய அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான தினேஷ் கார்த்திக் தனது அனுபவம் மற்றும் அசாத்திய திறமை மூலம் எங்களது அணிக்கு தனது பங்களிப்பை வழங்குவார் என்று சங்கக்காரா தெரிவித்தார்.

google news