Connect with us

tech news

விலை இவ்வளவா? 65W Asus சார்ஜர் அறிமுகம்

Published

on

அசுஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது 65W USB-C GaN சார்ஜரை அறிமுகம் செய்தது. இந்த சார்ஜர் மொபைல், லேப்டாப்களில் பயன்படுத்தும் வகையில் டிசைன் செய்யப்பட்டு உள்ளது. இந்த சார்ஜரில் இரட்டை யுஎஸ்பி டைப் சி போர்ட்கள் உள்ளன.

இதை கொண்டு ஒரே சமயம் இரு சாதனங்களை பாஸ்ட் சார்ஜிங் செய்ய முடியும். வெறும் 120 கிராம் எடை கொண்டுள்ள புதிய அசுஸ் சார்ஜர் 32 x 64.1 x 30mm அளவீடுகளை கொண்டிருக்கிறது. அந்த வகையில், இது எங்கும் எளிதில் கொண்டு செல்லும் வகையில் மிகவும் சிறியதாகவே உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சார்ஜர் கொண்டு ஸ்மார்ட்போன்களை 30 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்திடலாம். சார்ஜர் கொண்டு ஒரு சாதனத்தை சார்ஜ் செய்யும் போது 65 வாட்ஸ் திறன் வழங்கும். இதில் உள்ள ஸ்மார்ட் லோட் பேலன்சிங் இரண்டு யுஎஸ்பி சி போர்ட்களிலும் சம அளவு திறனை வெளிப்படுத்துவதை உறுதிப்படுத்துகிறது.

இத்துடன் 1.5 மீட்டர் யுஎஸ்பி சி டூ யுஎஸ்பி சி கேபிள் வழங்கப்படுகிறது. இதில் உள்ள பில்ட்-இன் இ-மார்க்கர் சிப் பாஸ்ட் சார்ஜிங் வசதியை பல்வேறு சாதனங்களுக்கு வழங்குகிறது. புதிய அசுஸ் USB-C GaN சார்ஜரின் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில், இதனை கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தி இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

இந்த சார்ஜர் வெள்ளை நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. இந்திய சந்தையில் புதிய அசுஸ் 65W USB-C GaN சார்ஜர் விலை அறிமுக சலுகையாக ரூ. 2,799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அசுஸ் இ ஸ்டோரில் நடைபெறுகிறது.

google news