Connect with us

Cricket

டாப் கியரில் ரியான் பராக்.. அறிமுக போட்டியிலே இப்படியா?

Published

on

இலங்கை நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20-ஐ தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில், இரு அணிகள் இடையிலான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஒன்று சமனில் முடிந்தது. மற்றொரு போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று அசத்தியது.

இதன் தொடர்ச்சியாக இரு அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (ஆகஸ்ட் 7) நடைபெற்றது. இந்த போட்டியின் மூலம் ரியான் பராக் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் களமிறங்கினார். இதன் மூலம் அசாம் மாநிலத்தில் இருந்து இந்திய அணிக்காக விளையாடும் முதல் வீரர் என்ற பெருமையை ரியான் பராக் பெற்றார்.

22 வயதான ஆல்-ரவுண்டரான ரியான் பராக்-க்கு இந்திய வீரர் விராட் கோலி கேப்-ஐ வழங்கினார். இன்றைய போட்டியில் அர்ஷ்தீப் சிங்கிற்கு மாற்றாக ரியான் பராக் களமிறங்கியுள்ளார். இதன் மூலம் இந்திய ஒருநாள் அணியில் விளையாடும் 256 ஆவது வீரராக ரியான் பராக் உள்ளார். ரியான் பராக் அறிமுகத்தின் போது பேசிய இந்திய வீரர் விராட் கோலி ரியான் பராக்-இடம், நீ போட்டியை வெல்லும் வகையில் செயல்படுவாய் என்று தெரிவித்தார்.

மூன்றாவது ஒருநாள் போட்டியின் ஆடும் லெவனில் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், ஸ்ரேயஸ் அய்யர், ரியான் பராக், சிவம் துபே, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த போட்டியில் முதலில் பந்துவீசிய இந்திய அணிக்காக ரியான் பராக் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்த போட்டியில் மொத்தத்தில் 9 ஓவர்கள் பந்துவீசிய ரியான் பராக் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களை சேர்த்துள்ளது. ரியான் பராக் தவிர முகமது சிராஜ், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

google news