Cricket
27 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இலங்கை
இலங்கை நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20-ஐ தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரில் மோசமான தோல்வியை பதிவு செய்தது.
இரு அணிகள் இடையிலான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஒன்று சமனில் முடிந்தது. மற்றொரு போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (ஆகஸ்ட் 7) நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களை எடுத்தது.
249 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி தவிர மற்ற வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். இந்திய அணியின் டாப் ஆர்டர், மிடில் முழுமையாக ஆட்டமிழந்து ஏமாற்ற இந்திய அணி 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் கடைசியில் 30 ரன்களை எடுத்து போராடினார்.
இதனால் இலங்கை அணி 110 ரன்களில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இலங்கை சார்பில் சிறப்பாக பந்துவீசிய துனித் வெல்லலகே 5 விக்கெட்டுகளையும், ஜெஃப்ரி வான்டர்சே மற்றும் மஹேஷ் தீக்ஷனா தலா 2 விக்கெட்டுகளையுயம், அசிதா பெர்னான்டோ 1 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றி உள்ளது.