Connect with us

tech news

இந்தியாவில் இயர்பட்ஸ் அறிமுகப்படுத்தும் ஐகூ – டீசர் வெளியீடு

Published

on

ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்த வரிசையில் மற்றொரு சாதனமும் அறிமுகமாக இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் ஐகூ இயர்பட்ஸ் விவரங்கள் பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருந்தன.

தற்போது ஐகூ தனது புதிய இயர்பட்ஸ் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. இதற்காக ஐகூ அதிகாரப்பூர்வ டீசரை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்தியாவில் ஐகூ நிறுவனத்தின் முதல் இயர்பட்ஸ் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போது இயர்பட்ஸ் என்று மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், எந்த மாடல் அறிமுகமாகும் என்பது ரகசியமாகவே உள்ளது.

புதிய இயர்பட்ஸ் குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த இயர்பட்ஸ் ஐகூ TWS 1e அல்லது விவோ TWS 3e மாடல்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இரு இயர்பட்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவை இரண்டும் சீன சந்தையில் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகிறது. விவோ TWS 3e மாடல் சில நாட்களுக்கு முன்பு தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

முதற்கட்டமாக புது இயர்பட்ஸ் குறித்து ஐகூ வெளியிட்டுள்ள டீசர்களில், இந்த மாடல் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ சார்ந்த டிசைன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த இயர்பட்ஸ் கேஸ் பிளாக், எல்லோ நிறங்களை கொண்டிருப்பது உறுதியாகி இருக்கிறது.

இத்துடன் கேஸில் ஐகூ லோகோ மற்றும் எல்இடி இண்டிகேட்டர் உள்ளது. இது சார்ஜிங் விவரங்களை காண்பிக்கும். இதுதவிர ஐகூ இயர்பட்ஸ் இன்-இயர் டிசைன் மற்றும் ஸ்டெம் கொண்டிருக்கும். இதில் டச் கண்ட்ரோல் மற்றும் மைக்ரோபோன்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது.

ஐகூவின் புது இயர்பட்ஸ் பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. வரும் நாட்களில் இது தொடர்பாக டீசர்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *