Connect with us

Cricket

கடந்த வாரம் உயிரிழந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் தற்கொலை.. புது தகவல்..!

Published

on

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிரகாம் தோர்ப் கடந்த வாரம் உயிரிழந்தார். இவரது உயிரிழப்பை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்த நிலையில், முன்னாள் இங்கிலாந்து வீரர் கிரகாம் தோர்ப் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை உயிரிழந்த கிரகாம் தோர்ப் மனைவியே தெரிவித்து உள்ளார்.

தனது 55 ஆவது வயதில் உயிரிழந்த கிராகம் தோர்ப் ஆகஸ்ட் 5 ஆம் தேதி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். கிரகாம் தோர்ப் தற்கொலை செய்து கொண்டார் என அவரது மனைவி, முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கல் ஏத்தர்டனுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார். தற்கொலை செய்து கொள்ளும் வரை மனரீதியிலும், உடல்ரீதியிலும் தோர்ப் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

“மனைவி மற்றும் இரு மகள்கள் அவர் மீது அளவற்ற பாசம் வைத்திருந்த போதிலும், அவர் குணம் பெறவில்லை. சமீப காலங்களில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. அவர் இல்லை என்றால் நாங்கள் நன்றாக இருப்போம் என்று அவர் அதிகம் நம்பினார், ஆனால் அவர் அப்படி நினைத்துக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டது எங்களுக்கு மன வேதனையை அதிகப்படுத்தி இருக்கிறது.”

“கடந்த சில ஆண்டுகளாக கிரகாம் மன அழுத்தம் மற்றும் கவலையால் பாதிக்கப்பட்டு இருந்தார், சமயங்களில் இது மிக மோசமாக இருந்தது. குடும்பமாக நாங்கள் அவருக்கு ஆதரவாக இருந்தோம். பல விஷயங்களில் அவருக்கு உதவ முயற்சித்தோம். தேவையான சிகிச்சைகளை வழங்கினோம், ஆனாலும் அவை எதுவும் வேலை செய்ததாக தெரியவில்லை,” என்று கிரகாம் தோர்ப் மனைவி தெரிவித்தார்.

மனைவியை தொடர்ந்து பேசிய தோர்ப்-இன் மகள் கிட்டி, “அவருக்கு வாழ்க்கையை பிடித்திருந்தது, எங்கள் மீதும் பாசம் கொண்டிருந்தார், ஆனால் அவரால் மீள முடியாமல் போனது. அவர் இப்படியொரு முடிவை எடுத்ததை நினைத்தால் மனம் உடைகிறது,” என்றார்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *