Connect with us

tech news

8GB ரேம், 32MP லென்ஸ்.. ₹9999-க்கு அறிமுகமான புது போன் – எந்த மாடல்?

Published

on

ரியல்மி நிறுவனத்தின் முற்றிலும் புதிய C சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ரியல்மி C63 5G என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை ரியல்மி C63 5G மாடலில் 6.67 இன்ச் HD+ 120Hz டிஸ்ப்ளே, அதிநவீன மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர், 8GB ரேம், 8GB வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க ரியல்மி C63 5G மாடலில் 32MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், ஏஐ அம்சங்கள் மற்றும் 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. வெறும் 7.94 அளவில் மிகமெல்லிய டிசைன் கொண்டிருக்கும் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன்யுஐ 5 வழங்கப்பட்டுழள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட் உள்ளது.

புதிய ரியல்மி C63 5G ஸ்மார்ட்போன் 4GB / 6GB / 8GB ரேம், 128GB மெமரி, மெமரியை 2TB வரை நீட்டித்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் பாஸ்ட் சார்ஜிங் வசதிகள் எதுவும் இன்றி வழக்கமான 10W சார்ஜிங் வசதி தான் வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் புதிய ரியல்மி C63 5G ஸ்மார்ட்போனின் 4GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 10,999 என்றும் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 11,999 என்றும் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 12,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையாக மூன்றுவித மெமரி மாடல்களுக்கு ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

தள்ளுபடி காரணமாக இவற்றின் விலை முறையே ரூ. 9,999, ரூ. 10,999 மற்றும் ரூ. 11,999 என மாறி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டேரி கோல்டு மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் நடைபெற உள்ளது.

google news