Connect with us

Cricket

ஓரம்கட்டப்பட்டவர்.. Warning-உடன் வாய்ப்பு – கரை சேர்வாரா?

Published

on

பலமுறை எச்சரிக்கை கொடுத்தும் உள்ளூர் போட்டிகளில் விளையாடாமல் போக்குக்காட்டிய இளம் வீரர் இஷான் கிஷன். இந்த ஆண்டு இந்திய அணிக்கான பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்திய அணியில் இருந்து ஒதுக்கப்பட்ட இஷான் கிஷன், மீண்டும் அணியில் இடம்பிடிக்கும் வழியை தீவிரமாக தேடி வந்தார்.

மேலும், உள்நாட்டு போட்டிகளில் விளையாட விரும்புவதாக தெரிவித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக நாட்டின் மிகமுக்கிய உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான துலீப் கோப்பை தொடர் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு நடைபெற உள்ள துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்கள் பலர் விளையாட உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே தேசிய அணியில் இருந்து ஒதுக்கப்பட்ட இஷான் கிஷனுக்கு துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. நான்கு அணிகள் பங்கேற்கும் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆந்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ளது. இதில் முதல் சுற்றுப் போட்டிகள் பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

கடந்த முறை போன்றில்லாமல், இந்த ஆண்டு துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் தேசிய அளவில் நடைபெற இருக்கிறது. இதற்கான அணிகள் ஏ,பி,சி மற்றும் டி என நான்காக பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு அணியையும் தேசிய தேர்வுக் குழு தேர்வு செய்ய இருக்கிறது. இந்த நிலையில், துலீப் கோப்பை தொடரில் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தொடரில் சிறந்து விளையாடும் பட்சத்தில் இஷான் கிஷன் தேசிய அணியில் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டுக்கான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 5 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 8 ஆம் தேதி வரையிலும், செப்டம்பர் 12 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 15 ஆம் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது.

google news