Cricket
என்ன சொல்றீங்க, இந்திய அணியில் முன்னாள் பாக். Coach-ஆ?
இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறார்.
தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மோர்னே மோர்கல் கடந்த 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றி வந்தார்.
இதுதவிர இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி டேர்டேவில்ஸ் ஆகிய அணிகளில் மோர்னே மோர்கல் பணியாற்றி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளாரக அறிவிக்கப்படும் முன்பே, இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமிக்கப்படலாம் என்று கூறும் தகவல்கள் வெளியாகின.
தற்போது இந்த தகவல் உண்மையாகி உள்ளது. “ஆம், மோர்னே மோர்கல் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்,” என்று ஜெய் ஷா இந்திய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
இந்திய அணியுடன் இணையும் மோர்னே மோர்கல், வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி துவங்கும் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் இருந்து பணியை துவங்கவுள்ளார். 39 வயதான மோர்னே மோர்கல் முன்னதாக கவுதம் கம்பீருடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஒன்றாக பணியாற்றி இருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் மோர்னே மோர்கல் 86 டெஸ்ட் போட்டிகள், 117 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 44 டி20 கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடி இருக்கிறார். இதில் ஒட்டுமொத்தமாக அவர் 544 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.