tech news
கம்மி பட்ஜெட், வீட்டிலேயே குட்டி தியேட்டர் செட்டப்.. அசத்தும் ப்ரோஜெக்டர் அறிமுகம்!
போர்ட்ரோனிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பீம் 450, FHD LED வயர்லெஸ் ப்ரோஜெக்டர் மாடலை அறிமுகம் செய்தது. சமீபத்தில் பீம் 430 மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் அறிமுகமாகி இருக்கிறது. புதிய பீம் 450 மாடலில் 4000-லூமென் லென்ஸ் கொண்டிருக்கிறது.
இந்த ப்ரோஜெக்டர் 40 முதல் 150 இன்ச் வரையிலான அளவில் படங்களை ஒளிபரப்பும் திறன் கொண்டுள்ளது. எனினும், இது சுவர் எந்த அளவுக்கு தூரமாக இருக்கிறது என்பதை பொருத்து மாறும். இந்த ப்ரோஜெக்டர் ஃபுல் ஹெச்டி (1080p) தரத்தில் வீடியோ ஸ்டிரீமிங் செய்யும். இதனால் திரைப்படங்கள், வீடியோக்கள், நிகழ்ச்சிகள் மற்றும் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்டவைகளை அதிக தெளிவாக பார்க்க முடியும்.
இதில் உள்ள ஆன்-டிவைஸ் கண்ட்ரோல் மூலம் மெனு மற்றும் ஸ்கிரீன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய முடியும். இத்துடன் ஆட்டோ கீஸ்டோன் கரெக்ஷன் வசதி வழங்கப்படுகிறது. இதை கொண்டு ப்ரோஜெக்டரை எளிதில் செட்டப் செய்துவிட முடியும். இத்துடன் ரிமோட் கண்ட்ரோல் வசதியும் வழங்கப்படுகிறது.
கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத், டூயல் பேண்ட் வைபை, ஈத்தர்நெட், இரண்டு USB போர்ட்கள், AV போர்ட்கள், 3.5mm ஸ்டீரியோ ஜாக், பில்ட்-இன் 5 வாட் ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் கொண்டிருக்கும் பீம் 450 ப்ரோஜெக்டர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் யூடியூப் போன்ற செயலிகளை சப்போர்ட் செய்கிறது. மேலும், க்ரோம்காஸ்ட் மற்றும் ஸ்கிரீன் மிரரிங் வசதியும் உள்ளது.
அறிமுக சலுகையாக பீம் 450 ப்ரோஜெக்டர் விலை ரூ. 13,449 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் 12 மாதங்கள் வாரண்டி வழங்கப்படுகிறது. விற்பனை அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் இதர ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.