tech news
தங்க கலர்-ல ஜொலிக்கப்போகும் ஐபோன் – லீக் ஆன ரென்டர்
ஆப்பிள் நிறுவனம் 2024 ஐபோன் மாடல்களை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் புதிய ஐபோன் சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. புதிய ஐபோன்கள் பற்றி நீண்ட காலமாக ஏராளமான தகவல்கள் வெளியாகிவிட்டன. இந்த வரிசையில், புதிய ஐபோன் 16 சீரிஸ் டம்மி யூனிட்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக வெளியாகி இருக்கும் புகைப்படங்களின் படி புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் நான்குவித நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. தற்போது வெளியாகி உள்ள டம்மி யூனிட்கள் ஐபோன் 16 ப்ரோ மாடலுக்கானதாகும். இதில் ஐபோன் 16 ப்ரோ மாடல் முற்றிலும் புதிய நிறத்தில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
பிரபல டிப்ஸ்டரான சோனி டிக்சன் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் படி, ஐபோன் 16 ப்ரோ டம்மி யூனிட்கள் பிளாக், வைட், கோல்டு மற்றும் கிரே அல்லது டைட்டானியம் நிற ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. புதிய ஐபோன்கள் இந்த நிறங்களில் தான் வெளியாகும் என்று சோனி டிக்சன் ஏற்கனவே வெளியிட்ட தகவல்களிலும் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
டம்மி யூனிட் தகவல்களின் படி ஐபோன் 16 ப்ரோ சீரிஸ், முந்தைய ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் வழங்கப்பட்ட புளூ டைட்டானியம் நிற ஆப்ஷன் நீக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. முன்னதாக கடந்த மே மாதம் ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியூ வெளியிட்ட தகவல்களில் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் பிளாக், வைட் அல்லு சில்வர், கிரே மற்றும் ரோஸ் நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
இதில் புதிய ரோஸ் நிற வேரியண்ட் புளூ டைட்டானியம் நிறத்திற்கு மாற்றாக அமையும் என்று கூறப்படுகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் பிளாக் டைட்டானியம், வைட் டைட்டானியம் மற்றும் புளூ டைட்டானியம் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.