tech news
கம்மி விலையில் புது சாம்சங் போன் அறிமுகம் – எந்த மாடல்?
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A06 ஸ்மார்ட்போன் சத்தமின்றி அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த வாரம் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஆக்டா கோர் பிராசஸர், 50MP கேமரா சென்சார்கள், அசத்தல் தோற்றம் கொண்டிருக்கிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை இதில் 6.7 இன்ச் HD+ ஸ்கிரீன், 60Hz ரிப்ரெஷ் ரேட், வாட்டர் டிராப் நாட்ச், அதிலேயே செல்ஃபி கேமரா, ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், அதிகபட்சம் 6GB ரேம், 128GB மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன்யுஐ 6 வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஆண்ட்ராய்டு அப்டேட்களும், நான்கு ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது. மேலும் பாதுகாப்பிற்காக சாம்சங் நாக்ஸ் வால்ட் செக்யூரிட்டி சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ் மற்றும் 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மற்றும் 25W சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது.
விலை விவரங்கள்:
தற்போது இந்த ஸ்மார்ட்போன் வியட்நாம் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலை 4GB ரேம், 64GB மெமரி மாடல் விலை VND3,190,000 இந்திய மதிப்பில் ரூ. 10,700 என்றும் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை VND3,790,000 இந்திய மதிப்பில் ரூ. 12,700 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஆகஸ்ட் 22 ஆம் தேதி துவங்குகிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.