Connect with us

Cricket

அவர நினைச்சா பீதியா தான் இருக்கு.. நேதன் லயன்

Published

on

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நேதன் லயன் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்காக ஆயத்தமாகி வருகிறார். இந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது.

இந்த தொடரில் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவாலாக இருப்பார் என்று நேதன் லயன் தெரிவித்தார். கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 712 ரன்களை விளாசினார்.

“நான் இதுவரை அவரை (யஷஸ்வி ஜெய்ஸ்வால்) எதிர்கொண்டதில்லை, ஆனால் அவர் எங்களது பந்துவீச்சாளர்கள் அனைவருக்கும் சவாலாக இருக்கப் போகிறார். அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய விதத்தை நான் பார்த்தேன். அவரது பேட்டிங் சிறப்பாக இருக்கிறது. இது குறித்து நான் இங்கிலாந்து அணியின் டாம் ஹார்ட்லியுடன் பேசினேன்.”

“எனக்கு கிரிக்கெட் பற்றி பேசுவதற்கு மிகவும் பிடிக்கும். அதுவும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியவர்களிடம் பேசுவதை நான் விரும்புவேன். இதுபோன்ற பேச்சுவார்த்தைகளில் எனக்கு தெரியாத பல விஷயங்களை நான் கற்றுக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட் பற்றி அறிந்து கொள்ள பல விஷயங்கள் உள்ளன. அவற்றை பற்றி எப்போதும் கற்றுக் கொண்டே இருக்கலாம்.”

“கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக முடிக்கப்படாத வியாபாரம் இது. நீண்ட காலம் ஆகிவிட்டது. இது எனக்குள் பயங்கர பசியை தூண்டிக் கொண்டிருக்கிறது. இந்த முறை விஷயங்கள் நிச்சயமாக மாறும். குறிப்பாக இது ஹோம் கிரவுண்ட் ஆகும். என்னை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இந்திய அணியில் பல்வேறு சூப்பர்ஸ்டார்கள் உள்ளனர். இது மகிவும் சவாலான விஷயம் தான், ஆனால் விஷயங்களை மாற்றி, கோப்பை மீண்டும் வெல்வதில் உறுதியாக இருக்கிறோம்,” என்று நேதன் லயன் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய அணி கடைசியாக 2014-15 காலக்கட்டத்தில் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்றது. அதன்பிறகு 2016-17, 18-19 ஆகிய காலக்கட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியிடமும், அஜிங்கியா ரஹானே தலைமையிலான அணியிடம் 2021 ஆம் ஆண்டிலும் 2023 ஆம் ஆண்டு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியிடம் ஆஸ்திரேலியா பார்டர்-கவாஸ்கர் கோப்பையை தோற்றுள்ளது.

google news